2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியதிலேயே மிகச் சிறந்த திறமைகளில் ஒருவராக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்தார். இந்த தொடரின் வரலாற்றில் விளையாடிய இளம்வயது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். வெறும் 14 வயதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய மூன்றாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மிரட்டலான சதம் அடித்தார்.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு, இந்திய அண்டர்-19 அணிக்காகவும் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து நிலையான ஆட்டங்களை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு தகுதி பெறும் வாய்ப்பை உருவாக்கி வருகிறார்.இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு, சூர்யவன்ஷியின் பேட் வேகத்தைப் பாராட்டி, அதை மாற்ற யாரும் அறிவுரை கூறக்கூடாது என்று தெரிவித்தார்.
பீகார் வீரரான இவர், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் பிரையன் லாராவுடன் விளையாடினால் தனது திறமையை மேலும் மெருகேற்றலாம் என்று கூறினார். “அவரது பேட் வேகம் அசாதாரணமானது. அவரது விப் பேட்டின் அசைவு அற்புதமாக உள்ளது. யாரும் அதை மாற்றக் கூடாது என்று நம்புகிறேன்.
“அவர் மேலும் மேம்பட வேண்டும். லாரா போன்ற ஒருவரிடம், அவருடன் பேசலாம். அவருக்கும் இதேபோன்ற பேட் லிஃப்ட் இருந்தது. பந்தை தடுக்கும்போது அல்லது மென்மையாக விளையாடும்போது பேட் வேகத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை அவர் கற்றுக்கொள்ளலாம். அதை அவர் கற்றால், அவர் ஒரு அசாதாரண திறமையாக உருவெடுப்பார்.”
“அவர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், அதாவது பலருடைய பேச்சைக் கேட்கக் கூடாது. மக்களின் பேச்சைக் கேட்காமல், தனது திறமையை மட்டும் நம்ப வேண்டும். பயிற்சியாளர்களுக்கும் இது முக்கியம், அவருக்கு அதிகமாக அறிவுரை வழங்க வேண்டாம். அவரை விடுங்கள்.”
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் பத்தி கம்பீர் பேசின இந்த வீடியோவை பாருங்க.. இனிமே ஒளிவு மறைவு வேண்டாம் – மனோஜ் திவாரி பேச்சு
“அவர் ஒரு அசாதாரண திறமை. டிராவிட் பாய் அவருடன் இருப்பது அவருக்கு அதிர்ஷ்டம். ராகுல் பாய் அவரைப் பார்த்துக்கொள்வார்,” என்று ராயுடு கூறினார்.சூர்யவன்ஷி தனது முதல் ஐபிஎல் சீசனை 7 இன்னிங்ஸ்களில் 252 ரன்களுடன், சராசரியாக 36 மற்றும் 206.56 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் முடித்தார்.