393 ரன்.. 63 பந்தில் வைபவ் சூரியவன்சி மீண்டும் ருத்ரதாண்டவ சதம்.. இந்தியா அசத்தல்.. தென் ஆப்பிரிக்கா பரிதாபம்

0
10
Vaibhav

தென் ஆப்பிரிக்கா அண்டர் 19 அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சூரியவன்சி 63 பந்தில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.

இதே தொடரில் கடந்த போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து, வெறும் 24 பந்துகளில் 68 ரன்கள் குவித்து இருந்தார். மேலும் இந்த ரன்னில் மொத்தம் பத்து சிக்ஸர்கள் அவர் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணி அட்டகாச துவக்கம்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஜார்ஜ் மற்றும் கேப்டன் வைபவ் சூரியவன்சி இருவரும் களமிறங்கினார்கள்.

அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்சி 18 பந்தில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்தில் சதம் அடித்தார். மொத்தம் 74 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 124 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஆரோன் ஜார்ஜ் சதம்

இதைத்தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் 106 பந்துகளில் 16 பவுண்டரிகள் உடன் 118 ரன்கள் குவித்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் சோனி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் கிடையாது.. எங்க புரூக்தான் அடுத்த பத்து வருஷம்.. ஆஸி லெஜன்ட் கருத்தை ஏற்காத மைக்கேல் வாகன்

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது 28 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து முக்கிய ஆறு விக்கட்டுகளையும் இழந்துவிட்டது. எனவே இந்த போட்டியிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -