சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த மிகப்பெரிய வீரராக யார் வருவார்கள் என்பது குறித்து ஆஸ்திரேலியா லெஜெண்ட் மார்க் வாக் கூறிய கருத்தை மறுத்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியிருக்கிறார்.
தற்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களாக ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அடுத்து யார் பெரிய வீரர்களாக வருவார்கள் என்பது குறித்த உரையாடல் மார்க் வாக் மற்றும் மைக்கேல் வாகன் இடையே நடைபெற்றது.
மார்க் வாக் கருத்து
இதுகுறித்து மார்க் வாக் கூறும் பொழுது “நான் இப்போது எடுத்து பார்த்தால் போட்டியில் மொத்தம் மூன்று வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக். இவர்கள் நால்வரையும் நான் அடுத்த எதிர்கால வீரர்களாக தேர்வு செய்கிறேன்”
“ஜெய்ஸ்வால் 24 வயதிலேயே இரண்டு இரட்டை சதங்கள் அடித்திருக்கிறார். அவருடைய டெஸ்ட் சராசரி 50 க்கு பக்கத்தில் இருக்கிறது. அவரிடம் ஏதோ சிறப்பு குணம் இருப்பதாக நான் பார்க்கிறேன். அடுத்த பெரிய சாம்பியன் பேட்ஸ்மேனாக அவர் வருவார் என்று நான் கருதுகிறேன். இந்த இந்திய வீரர்தான் என்னுடைய தேர்வு” என்று கூறியிருக்கிறார்.
மறுத்த மைக்கேல் வாகன்
இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும்பொழுது “ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஹாரி புரூக் விளையாட விதத்தை வைத்து நாம் அவர் குறித்து நிறைய பேசி வருகிறோம். அவர் இந்த தொடரில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அடுத்த பத்து வருடத்தில் அவர் பல பிரம்மாண்ட இன்னிங்ஸ்கள் விளையாடப் போகிறார் என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க : 302-8.. இங்கிலாந்துக்கு போராடும் இளம் ஆர்சிபி வீரரின் சதம்.. வெற்றியை நெருங்கும் ஆஸி.. ஐந்தாவது டெஸ்ட்
“அவர் இளம் வயதிலேயே தேவைக்கு அதிகமான கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அதிக போட்டிகளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டு வருகிறார். அவர் ரசிகர்களை போட்டிகளைப் பார்க்க இழுத்து வரக்கூடிய பெரிய பாக்ஸ் ஆபீஸ் வீரராக இருக்கப் போகிறார்” என்று கூறி இருக்கிறார்.






