தற்போது ஆசியா கப் ரைசிங் ஸ்டார்ஸ் டி20 தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்சி வெறும் 42 பந்தில் ருத்ர தாண்டவம் ஆடி மெகா சதம் அடித்திருக்கிறார்.
ஆசியா கப் சர்வதேச தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியா கப் ரைசிங் ஸ்டார்ஸ் தொடரை தோகா வில் நடத்துகிறது. இதில் ஆசியா கப் தொடரில் பங்கேற்ற எட்டு அணிகளும் அப்படியே பங்கேற்கின்றன. இந்தியா தனது ஏ அணியை அனுப்பி இருக்கிறது.
ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்சி
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஜிதேஷ் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா 6 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து துணை கேப்டன் நமன் திர் விளையாட வந்தார்.
ஒரு முனையில் நிலைத்து நின்ற இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேயாட்டம் ஆடினார். வெறும் 17 பந்துகளை சந்தித்த அவர் அதிரடியாக அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய அவர் வெறும் 32 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் அதிரடியாக சதம் அடித்தார்.
தொடர்ந்து மிரட்டல் அடி
இதைத்தொடர்ந்தும் அவரை எந்த பந்துவீச்சாளராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியாக 42 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உடன் 144 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். டி20 கிரிக்கெட்டில் இந்தியராக அதிவேக சதம் அடித்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இந்திய அணி வெறும் 12 ஓவரில் 180 ரன்கள் தாண்டி விளையாடிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : பும்ரா பாய் எனக்கு சொன்ன இந்த விஷயம் தான்.. திரும்ப வந்து விக்கெட் எடுக்க உதவுச்சி – சிராஜ் பேச்சு
தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடும் உர்வில் படேல் திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்திலும், அபிஷேக் ஷர்மா மேகலாயா அணிக்கு எதிராக 28 பந்திலும் அதிவேக சதம் அடித்த இந்தியர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் வைபவ் சூரியவன்சி யுஏஇ அணிக்கு எதிராக 32 பந்தில் அடித்திருக்கிறார்.






