நேற்று கிரிக்கெட் நமன் விருதுகள் அளிக்கப்படும் நிகழ்ச்சியில் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி தன்னுடைய முக்கிய குறிக்கோள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பெரும்பாலானவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். விராட் கோலி மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் சுப்மன் கில் இந்திய மண்ணில் உலகக்கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெறுவதே தன்னுடைய மிகப்பெரிய நோக்கமாக இருந்து வந்ததாக கூறியிருக்கிறார். கடந்த முறை 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் அதை தவறவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது அவருடைய தலைமையில் 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெல்வதே தன் வாழ்நாள் குறிக்கோளாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து வைபவ் சூரியவன்சி பேசும் பொழுது ” தற்போது என்னுடைய முக்கிய குறிக்கோள் என்னவென்றால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி என்னுடைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு பெரிய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதுதான். நான் ஐபிஎல் கோப்பையை வென்றால் அது பெரிய விஷயமாக இருக்கும்”
இதையும் படிங்க : சதம் அடிக்க ஆசைப்பட்டது உண்மை.. ஆனா 2024 இலங்கையில கம்பீர் பேசின விஷயத்தால செய்யல – சாம்சன் பேட்டி
“நான் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் விளையாடிய பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தொடர்ந்து என்னை கண்காணித்து வந்தது. என்னுடைய வளர்ச்சியில் அவர்களுடைய பங்கும் இருக்கிறது. மேலும் என்னுடைய முதல் ஐபிஎல் தொடரில் ராகுல் டிராவிட் சார் போன்றவர்களிடமிருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். எல்லோருக்குமே முதல் ஐபிஎல் சீசன் சுவாரசியமானதாக இருக்கும் எனக்கும் அப்படியே இருந்தது” என்று கூறி இருக்கிறார்.