வெறும் 227 பந்து.. மேக்ஸ்வெல்லின் வேற லெவல் ரெக்கார்டை உடைத்த.. 15 வயது சூரியவன்சி.. தொடங்கும் சாதனை

0
43
Vaibhav

இன்று ஐபிஎல் தொடரில் 15 வயதான வைபவ் சூரியவன்சி கிளன் மேக்ஸ்வெல்லின் பிரமாண்ட சாதனையை முறியடித்திருக்கிறார்.

தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடர் தோல்வியில் இருக்கும் இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் தியாகம்

கடந்த இரண்டு போட்டிகளாக வைபவ் சூரியவன்சி போட்டியின் முதல் பந்தை சந்தித்து விளையாடினார். இந்த நிலையில் லக்னோ அணியில் இன்று அனுபவம் வாய்ந்த முகமது ஷமி முதல் ஓவரை வீசுவார் என்ற ஜெய்ஸ்வால் முதல் பந்தை சந்திக்க வந்தார்.

இதைத் தொடர்ந்து பிரின்ஸ் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரை வைபவ் சூரியவன்சி எதிர் கொண்டார். இதில் அவர் சந்தித்த முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி அடித்தார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அவருக்கு ஒரு மெகா சாதனை வந்தது.

- Advertisement -

உடைந்த மேக்ஸ்வெல் சாதனை

வைபவ் சூரியவன்சி இரண்டு பவு
ண்டரிகள் அடித்ததின் மூலமாக ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக குறைந்த பந்துகளில் 500 ரன்கள் அடித்த வீரராக வைபவ் சூரியவன்சி சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயருக்கு நடந்தது அநியாயம்.. இதுக்கு மேலயும் அவருக்கு மரியாதை தரலைனா குற்றம் ஆயிடும் – மஞ்ச்ரேக்கர் கருத்து

வைபவ் சூரியவன்சி மொத்தம் 227 பந்துகளை சந்தித்து 500 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருக்கு முன்பாக பஞ்சாப் அணிக்காக அறிமுகமான மேக்ஸ்வெல் 260 பந்துகளில் இந்த சாதனையை செய்திருந்தார். மேலும் மூன்றாவது இடத்தில் பிரியன்ஸ் ஆர்யா 278 பந்துகளில் முதல் 500 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -