இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி 2024-25 தற்போது நடைபெற்று வரும் நிலையில் குரூப் இ பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் பீகார் மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதின.
இதில் பீகாரைச் சேர்ந்த இளம் வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
விஜய் ஹசாரே டிராபி 2024 -2025
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் இ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மத்திய பிரதேசம் மற்றும் பீகார் அணிகள் மோதி விளையாடின. ஒரு நாள் தொடர் வடிவில் நடைபெறும் இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் எஸ் கானி 48 ரன்கள் பிபின் சௌரப் 50 ரன்கள் குவித்தனர்.
இதில் பீஹார் அணியச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மத்திய பிரதேச அணி களம் இறங்கியது. பீகார் அணி நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை வெறும் 25.1 ஓவரில் வெற்றி பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பீகார் அணியை வீழ்த்தியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ஹார்ஸ் கௌலி 63 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். மேலும் கேப்டன் ராஜத் பட்டிதார் 55 ரன்கள் குவித்தார்.
பீகார் வீரர் வைபவ் சூரியவன்சி சாதனை
இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த இளம் வயது வீரரான வைபவ் சூர்யவன்சி விஜய் ஹசாரே டிராபியில் விளையாடியதன் மூலமாக ஒரு சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். இந்தியாவின் இளம் பேட்டிங் வீரனான இவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக 1999-2000ம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் விதர்பா அணிக்காக 14 வயது 51 நாட்களில் அறிமுகமான அலி அக்பரின் சாதனையை முறியடித்து இருக்கிறார். வைபவுக்கு தற்போது வயது 13 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரோஹித்துக்கு பிடிச்ச அதை செய்ய முடியலனா.. எதுக்கு நம்பர் 6ல் களம் இறங்கனும்.. இப்படி மாத்துங்க – சஞ்சய் பாங்கர் பேட்டி
அதுமட்டுமல்லாமல் தற்போது நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் வைபவ் சூர்யவன்சி 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு புகழ்பெற்ற இந்திய வீரரான ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் வைபவம் சிறந்த வீரராக வெளிவருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.