இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பாங்கர் ரோகித் சர்மா குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கு பெறாத நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியோடு இணைந்தார். இருப்பினும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அவர் கேப்டனாக வந்த பிறகு இரண்டாவது போட்டியில் தோல்வியும் மூன்றாவது போட்டியில் டிராவும் செய்துள்ளது. இதற்கு அவரது பேட்டிங்கில் சீரற்ற செயல்பாடும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்தத் தொடரின் சிறப்பாக விளையாடி வருவதைப் பார்த்து ரோஹித் ஆறாவது இடத்தில் களமிறங்கி விளையாடுகிறார். ஆனால் அவருக்கு அந்த வரிசை செட் ஆகவில்லை இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி வெறும் 19 ரன் மட்டுமே அடித்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கலாம் என்று அதற்கான காரணத்தை விளக்கிக் கூறியிருக்கிறார் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர்.
ரோகித்துக்குப் பிடித்த அதை செய்ய முடியல
இதுகுறித்து அவர் கூறும் போது “எந்த ஒரு பேட்டருக்கும் இது ஒரு மந்திரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ரோஹித் சர்மா இரண்டு விஷயங்களை செய்ய முடியும். அதில் ஒன்று என்னவென்றால் ரோகித் திரும்ப மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய வர முடியுமா என்பது தான். ஏனென்றால் இந்திய அணி தற்போது பந்து வீச்சை வலுப்படுத்தி கூர்மையாக்க வேண்டும் என்றால் அவர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும்.
இதையும் படிங்க:கோலி சப்போர்ட் செஞ்சாரு.. ஆனா தோனிதான் எனக்கு உண்மையை காட்டினார் – யுவராஜ் சிங் பேட்டி
அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா தன்னை சீக்கிரமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக அவருக்கு பிடித்த ஃபுல் ஷாட் அவரால் விளையாட முடியவில்லை என்றால் அவர் சற்று தாமதமாக வருகிறார் என்று தெரிகிறது. பொதுவாக ரோகித் சர்மா இந்த வகையான ஷாட்டை தவறவே விட மாட்டார். அப்படி இரண்டு போட்டிகளாக இது நடைபெறவில்லை என்றால் அவர் தாமதமாக வருகிறார் என்று அர்த்தம். மேலும் ஒரு பேட்ஸ்மேன் தனது சிறந்த ஷாட்டை விளையாடுகிறாரா இல்லையா என்பது அந்த பேட்ஸ்மேனுக்கு ஒரு சிறந்த அறிகுறி ஆகும்” என்று கூறி இருக்கிறார்.