97 பந்தில் 201 ரன்.. சமீர் ரிஸ்வி மாஸ் பேட்டிங் சாதனை.. சிஎஸ்கே தவறு செய்து விட்டதா?

0
2082
Sameer

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில லிஸ்ட் ஏ போட்டியில் அதிவேக இரட்டை சதத்தை அடித்து சமீர் ரிஸ்வி சாதனை படைத்திருக்கிறார்.

இந்த குறிப்பிட்ட தொடரில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணிக்கு அந்த அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வி அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

அங்கீகரிக்கப்படாத போட்டி

இது குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி என்பதால் இது ஒரு அங்கீகரிக்கப்படாத போட்டியாகவே அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் உத்தர பிரதேச அணிக்காக சமீர் ரிஸ்வி 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 97 பந்தில் 201 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியின் காரணமாக உத்தர பிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 405 ரன்கள் எடுத்தது.

பொதுவாக மாநிலங்களுக்கு இடையே ஆன அங்கீகரிக்கப்பட்ட லிஸ்ட் ஏ போட்டியில் நாராயணன் ஜெகதீசன் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் 114 பந்துகளில் அதிவேக இரட்டை சதத்தை அடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு முன்பாக முதலிடத்தில் நியூசிலாந்தின் சாரட் போவ்ஸ் இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அணி ஏலத்தில் விட்டது

கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து ஆச்சரியப்படும் இடத்தில் வாங்கியது. ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பெரிய அளவிற்கு அவர் செல்லவில்லை. இருந்தபொழுதும் அதிக திறமை கொண்ட இளம் வீரர் என்றும், வலது கை சுரேஷ் ரெய்னா என்றும் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களால் மதிப்பிடப்பட்டவராக இருக்கிறார்.

இதையும் படிங்க: கேரளா கிரிக்கெட்டுக்கு சாம்சன் இப்படி செஞ்சா.. பிசிசிஐ எப்படி செலக்ட் பண்ணும்? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இந்த நிலையில் இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திரிபாதி யாருக்காவது பதிலாக வாங்கி இருக்க முடியும். ஆனால் டெல்லி இவரை வெறும் 95 லட்ச ரூபாய்க்கு வாங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே எழுத்தில் தவறு செய்ததா? இல்லையா? என்பது அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் தான் தெரியும்.

- Advertisement -