ஐபிஎல் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது.. மேக்ஸ்வெல்ல தப்பா கணக்கு போடாதிங்க – கவாஜா பேட்டி

0
22
Maxwell

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியா அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மோசமாக அமைந்தது. ஐபிஎல் தொடரின் பேட்டிங் ஃபார்மை வைத்து மேக்ஸ் வெல்லை எடை போடக்கூடாது என ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் அதிகபட்சமாக அவர் 28 ரன்கள் ஒரு போட்டியில் எடுத்திருந்தார். மீதம் இருக்கும் ஏழு போட்டிகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் நாடு திரும்பியதால், எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக களம் இறங்கி கோல்டன் டக் ஆனார். அந்த நேரத்தில் மேக்ஸ்வெல் தன் விக்கெட்டை கொடுக்காமல் இருந்திருந்தால், வெற்றிக்கு தேவையான கூடுதல் 20 ரன்களை ஆர்சிபி அணியால் எடுத்திருக்க முடியும்.

தனி ஒரு வீரராக ஆர் சி பி அணியின் தோல்வியில் மிகப்பெரிய பங்கு மேக்ஸ்வெல்லுக்கு இருக்கிறது. மேலும் முதல் 7 போட்டிகள் விளையாடிய அவர் அதற்கு மேல் தனக்கு வாய்ப்புகள் வேண்டாம் என கேட்டு வெளியில் இருந்தார். வில் ஜேக்ஸ் இல்லாத காரணத்தினால்தான் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசி இருக்கும் உஸ்மான் கவாஜா கூறும் பொழுது “ஐபிஎல் பார்மை வைத்து மேக்ஸ்வெல்லை பார்ப்பது முற்றிலும் பொருத்தமே இல்லாதது. அவர் தேவைப்படும் பொழுதெல்லாம் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்டகாலமாக விளையாடும் ஒரு வீரர், வெளியில் சென்று விளையாடும் எல்லா நேரத்திலும் சிறப்பாக விளையாட முடியாது என்பதை அவர் புரிந்து இருப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய புதிய பயிற்சியாளர் பதவி.. 2 பேருக்கு மட்டுமே வாய்ப்பு.. இருவருமே இந்தியர்கள் – ஹர்பஜன் சிங் உறுதி

மேலும் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது எளிதான விஷயம் கிடையாது. மேக்ஸ்வெல் அப்படியான ரிஸ்க்கை எடுத்துக் கொள்கிறார். மேலும் அவருக்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் அங்கு கிடைத்தால் எல்லாம் மாறிவிடும். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து கவலை கிடையாது. அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ளப் போவதும் இல்லை. அவர் தன்னுடைய பேட்டிங்கை மீண்டும் கண்டுபிடிப்பார்” என்று கூறியிருக்கிறார்.