ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இணைந்து அமெரிக்காவும் நடத்தி வருகிறது. மேலும் அவர்கள் ஏ பிரிவில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெளியேற்றி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக உள்நாட்டில் பங்களாதேஷனுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அமெரிக்கா அணி விளையாடியது. இதில் ஆச்சரியப்படத் தக்க வகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை அமெரிக்க அணி கைப்பற்றியது.
இதற்கு அடுத்து டி20 உலகக்கோப்பையில் முதல் போட்டியில் ஆரோன் ஜோன்ஸ் அதிரடி பேட்டிங்கில் கனடா அணியை வென்றது. மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியில் ஆரோன் ஜோன்ஸ் மீண்டும் அதிரடி காட்ட, அந்தப் போட்டியை வென்று ஆச்சரியப்படுத்தி அடுத்த சுற்றுக்கும் முன்னேறிவிட்டது.
தற்பொழுது அந்த அணியின் முக்கிய வீரராக மாறி இருக்கும் ஆரோன் ஜோன்ஸ் உலகில் எந்த பெரிய அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என்றும், அமெரிக்காவின் அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒன்றுதலாக இந்த உலகக் கோப்பை தொடர் இருக்கும் எனவும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “உங்களிடம் நான் உண்மையை சொல்வது என்றால், அமெரிக்க கிரிக்கெட் பற்றி யாரும் பெரிய கவனமே செலுத்தவில்லை. எங்களிடம் எவ்வளவு திறமை இருக்கிறது என உலகில் யாருக்குமே சரியாக தெரியாது. நான்உறுதியாக நம்புகிறேன், நாங்கள் முறையான கிரிக்கெட் விளையாடினால் உலகில் எந்த பெரிய அணியையும் எங்களால் வீழ்த்த முடியும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்தும், பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். தொடர்ந்து இந்த பேச்சு வார்த்தைகள் அணிக்குள் சென்று கொண்டிருந்தது.
இதையும் படிங்க : நாளை ஆப்கானுக்கு எதிராக.. இந்திய உத்தேச பிளேயிங் XI.. 2 மாற்றங்களுக்கு ஏற்பட்ட அவசியம்.. ரோகித் முடிவு எடுப்பாரா?
தற்போது நாங்கள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பது முக்கியமானது. இது எங்களுக்கு மட்டும் இல்லாமல், அமெரிக்காவைச் சுற்றி இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அமெரிக்க இளம் தலைமுறையினருக்கும் மிகவும் முக்கியமானது. நாங்கள் அவர்களை மிகவும் பாராட்டுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.