பெனால்டியா 5 ரன் போயிடுச்சு.. புதிய விதி ஞாபகத்துல இல்ல.. யார் மேல் தவறு? – அமெரிக்கா பயிற்சியாளர் பேட்டி

0
251
Law

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணி இந்திய அணிக்கு கடுமையான போட்டியைக் கொடுத்தது. இந்த போட்டியில் ஸ்டாப் கிளாக் விதி பற்றி புரியாமல் அமெரிக்கா அணி இந்திய அணிக்கு இலவசமாக ஐந்து ரன்கள் கொடுத்தது தற்பொழுது சர்ச்சையாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி கடைசி ஐந்து ஓவர்களுக்கு 36 ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற நிலையில், பதினாறாவது ஓவரை அமெரிக்க அணி வீசப்படும் பொழுது அம்பயர் தடுத்து நிறுத்தி ஐந்து ரன்கள் பெனாலிட்டியாக இந்திய அணிக்கு வழங்கினார்.

- Advertisement -

ஏனென்றால் ஒரு ஓவர் வீசி முடித்ததும் அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் துவங்கி விட வேண்டும். இப்படி ஒரே போட்டியில் மூன்று முறை ஒரு நிமிடத்திற்குள் ஓவரை துவங்காமல் இருந்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் பெனாலிட்டியாக வழங்கப்பட்டு விடும். இந்த புதிய விதியான ஸ்டாப் கிளாக் விதிப்படி நேற்று அமெரிக்க அணி முதல் அணியாகத் தண்டிக்கப்பட்டது.

தற்பொழுது இதுகுறித்து அமெரிக்க அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டூவர்ட் லா கூறும்பொழுது “தற்பொழுது நாம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் எங்களுக்கு கடந்த ஆட்டங்களில் இது பற்றி நடுவர்கள் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். ஓவர்களுக்கு இடையில் வேகமாக செல்வதற்கு இந்த விதி தேவைப்படுகிறது. இதில் நாம் நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். வளரும் அணி கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

- Advertisement -

இது இப்போது வந்த விதி. இதை எங்கள் பல வீரர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக பங்களாதேஷ் இல்லை கனடா அணிகளுக்கு எதிராக விளையாடிய தொடரிலும் இந்த விதி எங்களுக்கு இல்லை. நாங்கள் உட்கார்ந்து பேசுவோம், ஆனால் இதை மேம்படுத்த முடியும்.

இதையும் படிங்க : 30/5 சரிந்த வெஸ்ட் இண்டீஸ்.. தனியாளாக ஹீரோவான ரூதர்போர்டு.. நியூசிலாந்து பரிதாபமாக வெளியேறியது

வீரர்களுக்கு இந்த விதி தெரியும்தான். நீண்ட காலமாக இந்த விதியில் விளையாடாத காரணத்தினால் அதை வீரர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது கடினமாக இருந்தது. நடுவர்களிடமிருந்து வரும் தகவல் என்னவென்றால் எங்கள் அணி வீரர்களுக்கு இரண்டு முறை எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் எங்கள் வீரர்கள் தான் இதற்கு பொறுப்பாகும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -