சிஎஸ்கேவில் ஒரு விஷயத்துக்கு கடவுளுக்கு நன்றி சொல்றேன்.. அந்த ஒரு பேர் காலத்துக்கும் நிலைக்கும் – உர்வில் படேல் பேட்டி

0
5
Dhoni

சிஎஸ்கே அணியில் தான் இணைந்து விளையாடுவதில் ஒரு விஷயத்திற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்வதாக இளம் வீரர் உர்வில் படேல் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடையில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால் உர்வில் படேல் சேர்க்கப்பட்டார். அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்த எல்லா போட்டிகளிலும் அதிரடியாக ஆரம்பித்து கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement -

இது வெறும் நம்பர் இல்லை

இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் உர்வில் படேல் மகேந்திர சிங் தோனி குறித்து மிகவும் உருக்கமான முறையில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவருடன் இணைந்து விளையாடுவது குறித்தும் அவர் குறித்தான நினைவுகள் எப்படியானது என்பது குறித்தும் எழுதி இருக்கிறார்.

உர்வில் படேல் அதில் கூறும்போது “7 என்பது மக்கள் போற்றும் ஒரு எண் மட்டுமே கிடையாது. அது அவர்கள் உள்ளுக்குள் உணரும் ஒரு உணர்வு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மதிக்கும் ஒன்று. காரணங்களை கடந்து நேசிக்கும் ஒன்று”

- Advertisement -

கடவுளுக்கு நன்றி

“அந்த எண்ணை நம்பிய ஒவ்வொரு இதயத்திலும், அது பல வருட நினைவுகளையும், மௌனமான உணர்வுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த தருணத்தை எனக்கு அருளிய கடவுளுக்கு நன்றி. ஏனென்றால் அத்தனை இதயங்களில் இருக்கும் கனவுகளில் இருக்கும், அந்த இதயத்தின் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்”

இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் மர்மம் முடிந்துவிட்டது.. எதிரணிகள் பயப்படாது.. இதை கண்டுபிடிக்க வேண்டும் – அஸ்வின் வலியுறுத்தல்

“இது வெறும் புகைப்படம் கிடையாது. இது என்னுடன் எப்போதும் நிலைத்திருக்கும் ஒரு உணர்வு. சில தருணங்களை விளக்க முடியாது. உணர மட்டுமே முடியும். இந்த உணர்வை நான் என்றென்றும் சுமந்து செல்வேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -