இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தற்போது சிஎஸ்கே கையில் இருக்கும் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ ரன் குவிப்பு
இதைத் தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வந்த ஜோஸ் இங்லீஷ் 33 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 85 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து அந்த அணியின் மிடில் ஆர்டர் பயங்கரமாக சொதப்பியது.
இறுதிக்கட்டத்தில் ஷாபாஸ் அகமத் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. ஜேமி ஓவர்டன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
உர்வில் படேல் சாதனை
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் 14 பந்தில் 28 ரன்கள் கேப்டன் ருதுராஜ் 28 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். இன்னொரு முனையில் உர்வில் படேல் 13 பந்தில் அரை சதம் அடித்து, 23 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டத்தை திருப்பினார். ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தவராக ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்தார்.
இதையும் படிங்க : சேப்பாக்கத்தில் ஒரு வாரமா இந்த விஷயம் நடந்திருக்கு.. அதனாலதான் இந்த ஒரு முடிவை எடுத்து இருக்கோம் – ருதுராஜ் பேச்சு
இதைத்தொடர்ந்து கார்த்திக் சர்மா 20 பந்தில் 20 ரன், சிவம் துபே 7 பந்தில் 15 ரன், பிரசாந்த் வீர் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் சிஎஸ்கே நான்கு பந்துகள் மீதம் வைத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பல ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே 200 ரன்கள் தாண்டி வெற்றிகரமாக சேஸ் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.






