2024 டி20 உலக கோப்பை.. நிறைவு பெறாத ஸ்டேடியம் கட்டுமான வேலை.. குழப்பத்தில் ரசிகர்கள்

0
4830

உலகக் கோப்பை டி20 தொடரானது மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி அனைத்து அணிகளும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் மிகத் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஜூன் மாதம் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஐசன்ஹோவர் பூங்காவில் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கான கட்டுமான பணிகள் இன்னமும் தொடங்கப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.

- Advertisement -

தற்போது அந்த மைதானத்தை காணும் பொழுது குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் பூங்காவாகவும், பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், நாய்கள் சுற்றி திரிந்து விளையாடுவதையும் காணமுடிகிறது. இன்னும் 6 மாதத்தில் மதிப்பு மிக்க இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலக கோப்பைப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் ஒரு செங்கல் கூட நட்டு வைக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அமெரிக்க கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பைப் போட்டி நடத்தப்படுவதற்கு முன்பே கிளீன் போல்ட் ஆகியுள்ளது. மேலும் அமெரிக்காவில் வசிக்கும் மக்களுக்கும் கிரிக்கெட் போட்டிகளில் நாட்டமில்லை என்பதால் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் அமைக்கப்படுவது குறித்து ஆர்வம் காட்டுவதில்லை.

- Advertisement -

இதனைக் குறிப்பிட்டு கிரிக்கெட் பத்திரிக்கையாளரான பீட்டர் டெஸ்லா பூங்காவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்து மைதானம் தொடங்குவதற்கான எந்த வேலையும் ஆரம்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் உலகக்கோப்பைக்கும் முன்பாக அமெரிக்காவால் ஒரு ஸ்டேடியத்தை உருவாக்க முடியுமா என்று சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ஆனால் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி பிப்ரவரி மாதம் வரையிலும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாது. எனவே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நியூயார்க்கில் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. எனவே ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் குறைவான இருக்கைகளே அமைக்கப்படும் என்று தெரிகிறது.

ஆனால் ஐசிசிக்கு 34,000 பேர் அமரும் வகையில் மைதானம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பாபர் ஆசாம் போன்ற முன்னணி வீரர்கள் இன்னும் ஆறு மாதங்களில் பயிற்சியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு தற்காலிகமாக ஒரு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டு பற்றி ஆர்வம் இன்னமும் குறைவாகவே உள்ளதால் அதனை மேம்படுத்தவே உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது.

ஆனால் இன்னும் மைதானம் அமைக்கும் பணிகளே நடைபெறாத நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -