கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது – தோல்விக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா வருத்தம்!

0
210
Rohitsharma

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இன்றைய இரண்டாவது போட்டி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு போட்டியாகும்!

பெங்களூர் அணிக்கு எதிராக மிகப்பெரிய ஆதிக்கத்தை ஐபிஎல் தொடரில் செலுத்தியுள்ள மும்பை இன்று இளம் வீரர்களைக் கொண்டு அது தொடருமா அல்லது புதிய ஆர் சி பி அணி அவர்களை வீழ்த்துமா என்கின்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருந்தது.

- Advertisement -

இதற்கு முன்பு பெங்களூர் மைதானத்தில் இரு அணிகளும் பத்து முறை மோதிய ஐபிஎல் போட்டிகளில் எட்டு முறை மும்பை அணியை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் முன்னணி வீரர்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி விட்டார்கள். ஆனால் ஒரு முனையில் நின்ற இளம் வீரர் திலக் வர்மா 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அணியை 171 ரண்களுக்கு கொண்டு சென்றார்.

ஓரளவுக்கு சவால் அளிக்கும் ஸ்கோர் என்றாலும் பெங்களூரு அணிக்கு துவக்கம் தர வந்த கேப்டன் பாப் மற்றும் விராட் கோலி இருவரும் மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து 16.2 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து விட்டார்கள். எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியின் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா “எங்களுக்கு நல்ல தொடக்கமில்லை ஆனால் இறுதியில் திலக் மிகச் சிறப்பாக விளையாடினார். அதே சமயத்தில் எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசவில்லை. நாங்கள் போதுமான அளவுக்கு பேட்டிங்கும் செய்யவில்லை. இது பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளம். திலக் மிக நல்ல சில ஷாட்களை இங்கு விளையாடினார். அவர் நல்ல தைரியத்தை ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். நாங்களும் ஆட்டத்தை தைரியமாக விளையாடவே முடிவு செய்திருந்தோம். அணியை நல்ல இலக்குக்கு கொண்டு வந்த திலக்கிற்கு பாராட்டுகள்!” என்று தெரிவித்தார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளத்தில் நாங்கள் எங்களுக்கான தகுதிக்கு விளையாடவில்லை. நாங்கள் இன்னும் 30, 40 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடந்த ஏழு எட்டு மாதங்களாக நாங்கள் பும்ரா இல்லாமல்தான் விளையாடி வருகிறோம். நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு மாற்றாக வந்த வீரர்களும் திறமையானவர்கள் நன்றாகவே செயல்படுகிறார்கள். எங்கள் அணியில் சில வீரர்களுக்கு இது முதல் ஐபிஎல் சீசன். அவர்கள் முன்னேறி வருவார்கள்!” என்று கூறியிருக்கிறார்!