” இவர் இதைச் சரி செய்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் பெற முடியும் ” – உம்ரான் மாலிக்கின் குறையை சுட்டிக் காட்டியுள்ள பஞ்சாப் கேப்டன் மயாங்க் அகர்வால்

0
941
Mayank Agarwal about Umran Malik

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்து உள்ள டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 58 பந்துகளில் 92* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் உம்ரான் மாலிக் குறித்து ஒரு சில விஷயங்களை தற்பொழுது பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -
அவர் இனி தனது எக்கானமியில் கவனம் செலுத்த வேண்டும்

“உம்ரான் மாலிக் தற்பொழுது சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக வேகமான பந்துகளை வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இந்திய அணியில் விளையாடும் நேரம் அவருக்கு வந்து விட்டது. ஆனால் தற்பொழுது இது மட்டும் அவருக்கு பத்தாது.

இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாட வேண்டும் என்றால் அவர் இனி தன்னுடைய எக்கானமியில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஓவரில் பத்துக்கும் மேற்பட்ட ரன்கள் கொடுப்பதன் மூலம் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் அவருக்கு கிடைத்துவிடாது. எனவே இனி அவர் தனது பௌலிங் எக்கானமியில் விரைந்து கவனம் செலுத்த வேண்டும் என்று அக்கறையுடன் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக்

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 22.60 மற்றும் எக்கானமி 8.92 ஆக உள்ளது. ஒரு ஓவரில் தொடர்ச்சியாக அனைத்து பந்துகளையும் நோக்கி 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய திறமை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி எந்த ஒரு விக்கெட்டும் கைப்பற்றாமல் 52 ரன்கள் உம்ரான் மாலிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.