முதல் பந்தை வீசுவதற்கு முன்பாகவே மும்பை அணிக்கு 8 ரன்களை தாரை வார்த்த உம்ரான் மாலிக் – வீடியோ இணைப்பு

0
622

ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற நிச்சயமாக இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறது.

போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக திரிபாதி 44 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 76 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே 8 ரன்கள் கொடுத்த உம்ரான் மாலிக்

முதல் ஓவரை வீச வந்த உம்ரான் மாலிக் இஷான் இஷானுக்கு எதிராக வீசினார். எதிர்பாராத விதமாக அது உயரம் காரணமாக நோ பாலாக எடுத்துக் கொள்ளப் பட்டது. அந்த பந்தில் ஒரு ரன் இஷன் கிஷன் மற்றும் ரோஹித் சேர்த்தனர். ஃப்ரீ ஹிட் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 2-வது முறையாக முதல் பந்தை வீசிய மாலிக் இந்த முறை வைடாக வீசினார்.

மீண்டும் ஃப்ரீ ஹிட் தொடர மூன்றாவது முறையாக முதல் பந்தை வீசிய பொழுது ரோஹித் ஷர்மா ஹெல்மெட்டில் பட்டு பவுண்டரி சென்றது. இந்த முறையும் உயரம் காரணமாக மீண்டும் நோபால் தொடர்ந்தது. ஒரு வழியாக நான்காவது முறையாக முதல் பந்தை சரியாக வீச அந்த பந்தில் ஒரு ரன் ரோஹித் ஓடினார்.

- Advertisement -

முதல் பந்தில் மட்டும் 9 ரன்கள் சேர்ந்தன. அதாவது முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே 8 ரன்கள் உம்ரான் மாலிக் விட்டுக் கொடுத்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. உம்ரான் மாலிக் வீசிய முதல் ஓவர் விடியோ தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

16 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிக் கொண்டிருக்கிறது.