இந்திய கிரிக்கெட்

ஏமாற்று வேலை காட்ட முடியாத அளவுக்கு.. புவனேஸ்வர் குமார் செஞ்சி விட்டு இருக்கார்.. இதனால்தான் வாய்ப்பு – கைப் விளக்கம்

​இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடவுள்ள நிலையில், அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஆர்சிபி நட்சத்திர பௌலர் புவனேஷ்வர் குமார் குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் மிக முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு புவனேஷ்வர் குமார் மீண்டும் திரும்பியுள்ளார்.

- Advertisement -

​ஐபிஎல் தொடரில் தனது அபாரமான பௌலிங் திறமையைக் காட்டி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்துள்ள புவனேஷ்வர் குமாரின் இந்த கம்பேக், இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தத் தேர்வு கிரிக்கெட் ரசிகர்களாலும் வல்லுநர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

​இதுகுறித்து முகமது கைஃப் பேசும்போது “நான் அவரை முதன்முதலில் பார்க்கும்போது அவருக்கு 17 வயது. அவர் இவ்வளவு நீண்ட கரியர் வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியாது. இதற்கு முழு காரணமும் அவரும் அவருடைய திறமையும்தான். ஒரு ஃபாஸ்ட் பௌலருக்கான உடல் அமைப்பு அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. பார்க்க அப்படித் தெரியவே மாட்டார். அப்படிப்பட்ட ஒரு பௌலர் இவ்வளவு பெரிய முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவரிடம் நான் கவனித்த மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அவரிடம் ஸ்விங் மற்றும் சீம் இரண்டுமே இருந்தது. அவரது கரியரில் சிறிய பகுதியாக நான் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் அவர் பேசும்போது “ஒருவர் கைவிட நினைக்க ஒவ்வொரு முறையும் புவனேஷ்வர் குமாரின் பெயர் நினைவுக்கு வரும் வகையில் அவருடைய கம்பேக் ஒரு சிறந்த முன்னுதாரணத்தை அமைக்கும். இது வெறும் கம்பேக் மட்டுமல்ல, ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும். தேர்வாளர்களையும் நான் இங்கு பாராட்ட விரும்புகிறேன். இது மிகவும் கடினமான முடிவு. ஒரு வீரர் சிறப்பாக செயல்படும் போது அவருக்கு வயது ஆகிவிட்டது என்று சொல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை. எதிர்காலத்தைப் பார்க்கிறோம் என்று சொல்வதும் பெரிய ஏமாற்று வேலை. உன்னிடம் ஒரு அனுபவமிக்க மற்றும் ஃபார்மில் இருக்கும் பிளேயர் இருக்கும்போது அவருக்குப் பலன் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய முகமது கைஃப் “ஒருவர் குறிப்பிட்ட வயதைத் தாண்டி விளையாட முடியாது என்று எங்கே எழுதப்பட்டிருக்கிறது? சொல்லுங்கள். பௌலிங் அட்டாக் இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் இங்குச் சரியான முடிவை எடுத்துள்ளனர். இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. பௌலிங் கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கிறது, அதை மூழ்க விடாமல் தடுக்கும் முயற்சி இது. நாங்கள் எப்போதும் தேர்வாளர்களை விமர்சிக்கிறோம், ஆனால் இங்கே அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும். அவர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிறார், முதலில் அவரை விளையாட விடுங்கள். அவர் ஒரு சிறந்த பௌலராக இருந்தாலும் அவருக்கும் சிறிது நேரம் பிடிக்கும்” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts