இந்திய கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட்ல இருக்க இந்த விஷயம்.. நம்ம பாகிஸ்தான் கிரிக்கெட்ல இல்ல.. பிரச்சனை இதுதான் – உமர் குல் கருத்து

இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் சில சிறப்பான விஷயங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இல்லாததுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது முன்னாள் பாகிஸ்தான் வீரர் உமர் குல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணியின் மிகச் சிறந்த வீரராக பும்ரா இருந்த போதிலும் கூட உடல் தகுதி இல்லையென்றால் அவரை வெளியில் வைப்பதும், மேலும் காயமடைந்தால் அதற்கான மறுவாழ்விற்கு நேரம் கொடுப்பதும், மீண்டும் திரும்பி வந்தால் உடனே அணியில் சேர்ப்பது குறித்து உமர் குல் பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இல்லை

இதுகுறித்து உமர் குல் கூறும்போது “நம்முடைய பாகிஸ்தான் கிரிக்கெட் கலாச்சாரத்தில் மூத்த வீரர்கள் 70, 80% உடல் தகுதியுடன் இருந்தாலே தாங்கள் நன்றாக இருப்பதாக கூறுவார்கள். ஏனென்றால் அவர்களுடைய இடத்திற்கு வேறு ஏதாவது வீரர்கள் வந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். இதை மாற்றுவதற்கு வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் முறையை கொண்டு வர வேண்டும்”

“சுழற்சி முறையை கொண்டு வரும் பொழுது சிறப்பான முறையில் செயல்படும் இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க முடியும். இந்த சுழற்சி முறை கலாச்சாரத்தை நம்முடைய பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வளர்க்க வேண்டும். அதே சமயத்தில் உடல் தகுதி அடைந்து திரும்பி வரும் மூத்த வீரருக்கு முன்னுரிமை கொடுத்து அவரை உடனே அணியில் சேர்க்க வேண்டும்”

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை பாருங்கள்

“இதில் வீரர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவருக்குமே பொறுப்பு இருக்கிறது. அதே சமயத்தில் காயம் மறுவாழ்வு என்று வரும் பொழுது வீரர்களிடம்தான் முழு பொறுப்பும் இருக்கிறது. அவர்கள் உடல் எப்படி இருக்கிறது என்று அவர்களால்தான் சரியாக உணர முடியும். எப்போது அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர்களால் சொல்ல முடியும்”

இதையும் படிங்க : சூர்யா நீங்க கடினமா ஆடுங்க.. ஆனா நியாயமா ஆடுங்க – அஸ்வின் நிலைப்பாட்டுக்கு ரகானே எதிர்ப்பு பேச்சு

“இந்தியாவில் தேசிய கிரிக்கெட் அகாடமி இருக்கிறது. காயமடைந்த வீரர்கள் மறுவாழ்வு பெறுவதற்கு மருத்துவர்கள் ஐந்து அல்லது ஆறு வாரங்கள் அவகாசம் கொடுக்கிறார்கள். நீங்கள் பூரணமாக குணமடைவதற்கு உங்களுக்கு அவகாசம் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். இந்த நேரத்தில் வீரர்களை சுழற்றி பயன்படுத்தும் சுழற்சி முறையை வைத்திருக்கிறார்கள். பும்ரா காயத்திலிருந்து திரும்பி வந்தால் உடனே விளையாட வைப்பார்கள். இல்லையென்றால் ஓய்வு கொடுத்து முக்கியமான போட்டியில் விளையாட வைப்பார்கள். இதைத்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: BCCIUmar gul

Recent Posts