14 பேர் ஒற்றை இலக்கம்.. வெறும் 77 ரன்.. உகாண்டா வரலாற்று வெற்றி.. டி20 உலக கோப்பையில் சுவாரசியம்

0
299
Uganda

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சி பிரிவில் டயானா மைதானத்தில் பப்புவா நியூ கினியா மற்றும் உகாண்டா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உகாண்டா அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற உகாண்டா முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமான ஆடுகளத்தில் அனுபவம் இல்லாத இரண்டு அணிகளுமே தடுமாறி, அதே சமயத்தில் ஒரு பரபரப்பான போட்டியையும் கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹிரி ஹிரி 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். உகாண்டா பந்துவீச்சில் ன்சுபுகா 4 ஓவர்கள் பந்துவீசி 4 ரன் மட்டுமே விட்டு தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணி 6.3 ஓவர்களில் 25 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதன் காரணமாக குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு அணிகளும் வெற்றிக்கு பதிலாக தோல்வியடைவதற்கு கடுமையாக போட்டி போட்டன. இரண்டு அணியிலும் சேர்த்து மொத்தம் 14 பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்கள்.

இறுதியாக ஒரு வழியாக உகாண்டா அணி 18.2 ஓவரில் ஏழு விக்கெட் இழந்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. உகாண்டா அணிக்கு ரிசாத் அலி ஷா 56 பந்துகளில் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 125 ரன்.. வாய்விட்ட ஒமான் வச்சு செய்த ஆஸி.. மேக்ஸ்வெல் கோல்டன் டக்.. ஸ்டோய்னிஸ் பேட்டிங் பவுலிங் கலக்கல்

மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் உகாண்டா அணிக்கு முதல் உலகக் கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்த அணி தங்களது கிரிக்கெட் வரலாற்றில் உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தங்களை தொடர்ந்து வந்து ஆதரிக்கும் தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு மைதானத்தில் சுற்றி வந்து நன்றி தெரிவித்தார்கள்!