“கடைசி வரை நிற்க அவர்தான் காரணம்” – U19 WC அரையிறுதி ஆட்டநாயகன் உதய் சகரன் பேச்சு

0
601
Uday

இன்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர்-19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதிய முதல் அரை இறுதி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அரைசதம் அடித்த இருவருமே நிறைய பந்துகளை எடுத்து அடித்தார்கள்.

- Advertisement -

இந்த ஆடுகளத்தில் 244 ரன்கள் போதுமானது என்றும் எனவே தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் எனவும் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி முதல் பந்திலேயே விக்கெட்டை கொடுத்தது. மேலும் 32 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பெரிய நெருக்கடி உண்டானது.

இந்த நிலையில் கேப்டன் உதய் சகரன் மற்றும் சச்சின் தாஸ் இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடி 181 ரன் பாட்னர்ஷிப் அமைத்து அணியைக் கரை சேர்த்தார்கள். 203 ரன்கள் அணி எடுத்திருந்தபோது சச்சின் தாஸ் 96 ரன்னில் வெளியேறினார். இதற்கு அடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழ ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போட்டி சமநிலையை எட்டும் வரை களத்தில் நின்று உதய் சகரன் வெற்றியை உறுதி செய்து 81 எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இந்திய அணி இந்த போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

ஆட்டநாயகன் விருது வென்ற உதய் சகரன் பேசும்போது “நாங்கள் பேட்டிங்கில் ஒரு கட்டத்தில் மிகவும் பின் தங்கியிருந்தோம். கடைசிவரை பேட் செய்ய வேண்டும் என்று மட்டும் நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வதை நான் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

நான் பேட்டிங் செய்ய வந்த பொழுது பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. ஆரம்பத்தில் விளையாடுவதற்கு கடினமாக இருந்தது. பிறகு பந்து தேய்ந்ததும் விளையாடுவதற்கு வசதியாக பேட்டுக்கு வந்தது.

இதையும் படிங்க : U19 உலககோப்பை.. 32/4.. காப்பாற்றிய சச்சின்.. பைனலில் இந்தியா.. தென் ஆப்பிரிக்கா வழக்கம் போல் வெளியேறியது

எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவையாக இருந்தது. பின்பு அது கிடைத்தது. எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் எப்பொழுதும் நம்பிக்கை குறையவே குறையாது. இறுதிப்போட்டியை எட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.