130 ரன் 6 ஓவர்.. யுஏஇ அபார பேட்டிங்.. இந்திய அணியை வீழ்த்தியது.. ஹாங்காங் சிக்ஸஸ் 2024

0
385
UAE

நடப்பு ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் தொடரில் பரபரப்பான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை யுஏஇ அணியை வீழ்த்தியது. மேலும் இந்திய அணி கால் இறுதியில் தோற்று தொடரை விட்டும் வெளியேறியது.

தற்போது ஹாங்கில் ஆறு ஓவர்கள் மற்றும் ஆறு வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ராபின் உத்தப்பா தலைமையில் கலந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

யுஏஇ அணி அதிரடி

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்து வீசுவது என அறிவித்தது. யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆசிப் அலி போட்டியின் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் காலித் ஷா 10 பந்தில் 42 ரன்கள், ஜாகுர் கான் 11 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து ஆறு ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு யுஏஇ அணியில் 130 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஒரு ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பரிதாபம்

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பரத் சிப்லி 6 பந்தில் 20 ரன்கள், மனோஜ் திவாரி மூன்று பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்தியா அணிக்கு பெரிய ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களிடமிருந்து அதிரடியான ஆட்டம் வரவில்லை.

இந்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் ராபின் உத்தப்பா 10 பந்தில் 43 ரன்கள், ஸ்டூவர்ட் பின்னி 11 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்கள். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட ஆறு ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையும் படியுங்க : சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சிறப்பு சலுகை – வெளியான புதிய தகவல்கள்

இதைத்தொடர்ந்து இந்திய அணி அடுத்தடுத்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -