2025 பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளுமா என்று முடிவாகாத நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்திருக்கிறது.
அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ள இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? அல்லது ஹைபிரிட் முறையில் இந்திய அணி மற்றும் வெளியில் விளையாடுமா? என்பது இன்னும் முடிவாகாமல் இருந்து வருகிறது.
17 ஆண்டுகாலப் பிரிவு
இந்திய அணி கடந்த 17 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. மேலும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வந்திருக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் இந்தியா வந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடக்கும் பொழுது இந்திய அணி சென்று விளையாட தயக்கம் காட்டி வருகிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு சென்று விளையாடினால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடர் வெற்றி அடையும் நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்திய அணி வந்து விளையாடுவதற்கு வெளிப்படையான அழைப்புகளை பலமுறை கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் இந்திய ரசிகர்களுக்கு சிறப்பு சலுகை
இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாடுவது முடிவாகாத பொழுதும், சாம்பியன்ஸ் டிராபி தொடரை பார்ப்பதற்கு இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வர விரும்பினால், அவர்களுக்கு விசா மிக விரைவில் வழங்கப்படும் என்றும், இந்திய ரசிகர்களை வரவேற்க மிகவும் விருப்பத்துடனும் ஆர்வமாகவும் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க : 36 பந்து சம்பவம்.. தோனியின் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்.. காத்திருக்கும் புதிய வரலாறு.. மும்பை டெஸ்ட்
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி கூறும்பொழுது “நாங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூடுதல் டிக்கெட்டை ஒதுக்குவதற்கான சிறப்பு ஒதுக்கீட்டை வைத்திருக்கிறோம். மேலும் விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை மிக விரைவாக செய்வதற்கான வேலைகளையும் ஆரம்பித்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.