“உண்மைய சொல்றேன்.. 3 பேருமே சரியா பவுலிங் பண்ணல” – தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேச்சு

0
88
DK

நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்கிய ஐந்து போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதலில் பந்து வீசி இங்கிலாந்து அணியை 246 ரன்களில் கட்டுப்படுத்தியது.

இந்திய சுழற் பந்துவீச்சாளர்களில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அக்சர் படேல் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமில்லாத ஆடுகளத்தில் பும்ரா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் இங்கிலாந்து கொஞ்சம் ரண்களை அடித்து அதிரடியாக எடுத்தது. அதே சமயத்தில் அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். நேற்றைய போட்டி இந்திய எதிர்பார்த்த அளவுக்கு இங்கிலாந்தை குறைந்த ஸ்கோருக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதுகுறித்து நேற்று பேசி இருந்த இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதை ஏற்றுக்கொண்டார். தாங்கள் கொஞ்சம் ரன்கள் சேர்த்துக் கொடுத்து விட்டதாகவும் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப் மூலம் தப்பித்திருப்பதாகவும் கூறினார்.

- Advertisement -

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் செயல்பாடு பற்றி பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” உண்மையை சொல்வது என்றால் மூவரும் சிறப்பாக பந்து வீசவில்லை. இது அவர்களின் சிறந்த நாள் என்று நான் நினைக்கவில்லை. இங்கிலாந்து சில விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்தது. மேலும் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இந்த ஆடுகளம் இந்தியாவுக்கு பேட்டிங் செய்ய கடினம் என்று சொல்ல முடியாது. ஆனால் வெளியில் இருந்து வரக்கூடியவர்களுக்கு பேட்டிங் செய்ய கடினமானது.

இந்திய சுழற் பந்துவீச்சாளர்களில் மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது அக்சர் படேல். அவர் அச்சுறுத்தலாக இருந்தார். பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கான கடினமான பந்துகளை அவர் உருவாக்கினார். அஸ்வின் மற்றும் ஜடேஜா வீசிய பந்துகளில் பேட்ஸ்மேன்கள் தப்பிக்க முடியும். ஆனால் அவர் பந்துகளில் முடியாது.

இதையும் படிங்க : “அஸ்வின் இந்த மேட்ச்ல இதை செய்யனும்.. நான் இந்த சீரியஸ்ல இதை செய்யனும்” – ஜடேஜா விருப்பம்

நேற்று ஸ்டோக்ஸ்க்கு பும்ரா வீசிய பந்து மிகவும் கடினமானது. ரவுண்டு த விக்கெட்டில் இருந்து வந்து மிடில் அண்ட் ஆப் ஸ்டெம்பை பந்து அடிக்கும் என்றால், அந்தப் பந்தை யாராலும் விளையாட முடியாது. பும்ராவும் அப்படி நினைத்திருக்க மாட்டார். அது விக்கெட்டில் இருந்த வெடிப்புகளில் பட்டு அப்படி ஆகி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -