U19 உலககோப்பை.. இந்திய வீரர் தம்பி அதிரடி சதம்.. 7பேர் ஒற்றை இலக்கம்.. அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா பிரம்மாண்ட வெற்றி

0
402
U19wc

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அண்டர்19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஏ பிரிவில் மேலும் பங்களாதேஷ், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இருக்கின்றன.

இந்த உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி மோதிய முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று, அந்தப் போட்டியின் நடுவில் வம்புக்கு வந்த பங்களாதேஷ் வீரர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தது.

- Advertisement -

இன்று இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இரண்டாவது போட்டி அயர்லாந்து அணிக்கு எதிராக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆதர்ஸ் சிங் 17, அர்சின் குல்கர்னி 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து இந்திய வீரர் சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் மற்றும் கேப்டன் உதய் சகரன் இருவரும் சேர்ந்து இந்திய அணியை மீட்டு எடுத்ததோடு வலிமையான இடத்திற்கு கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய முசிர் கான் 106 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 118 ரன்கள் எடுத்தார். உதய் சகரன் 84 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் உடன் 75 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆரவல்லி அவினாஷ் 22, சச்சின் தாஸ் 21 ரன்கள் எடுக்க, இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து இந்திய அணியின் வலிமையான பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அயர்லாந்து அணியின் விக்கட்டுகள் சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தது. 45 ரன்கள் 8 விக்கெட்டுகளை ஒரு கட்டத்தில் அந்த இழந்திருந்தது.

இதையும் படிங்க : “நிஜமா ரன் சேர்த்து குடுத்துட்டோம்.. ஜெய்ஸ்வால்தான் மூச்சு விட வச்சிருக்கார்” – அஷ்வின் ஓபன் ஸ்பீச்

பிறகு கடைசி இரண்டு விக்கெட்டுகள் சுதாரித்து விளையாட இறுதியாக அயர்லாந்து அணி நூறு ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 201 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அயர்லாந்து அணியில் ஏழு பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றை உறுதிப்படுத்தி விட்டது. இந்திய அணியின் தரப்பில் நமன் திவாரி 4 மற்றும் சௌமய் பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.