U19 WC பைனல்.. நாளை மழை வாய்ப்பு மற்றும் ஆடுகளம் எப்படி இருக்கும்?.. முழு புள்ளி விபரங்கள்

0
157
U19wc

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்று முடிவுக்கு வந்தது. முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்து முறை 19 வயது உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுஇருக்கிறது. மேலும் நடப்பு சாம்பியன் ஆகவும் இந்திய அணியே இருக்கிறது.

இதுவரையில் இந்த இரண்டு அணிகளும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையில் மொத்தம் மூன்று முறை இறுதிப் போட்டியில் சந்தித்திருக்கின்றன. இதில் இரண்டுமுறை இந்தியாவும் ஒருமுறை ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த தொடரின் இரண்டு அரையிறுதி போட்டிகளும் பெனோனி வில்லோமூர் மைதானத்தில் நடைபெற்றன. இதே மைதானத்தில்தான் இறுதிப் போட்டியும் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடந்து முடிந்த இரண்டு அரையிறுதி போட்டிகளிலும் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சுக்கு நல்ல சாதகங்கள் இருந்தது. மேலும் இங்கு வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைய விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இரண்டு அரை இறுதி போட்டிகளுமே குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டிகள் ஆகவே நடந்து முடிந்திருக்கிறது.

எனவே இறுதிப் போட்டியும் இப்படித்தான் இருக்கும். அதே சமயத்தில் பந்து தேய்ந்த பிறகு சுழல் பந்துவீச்சிக்கும் சாதகங்கள் இருக்கிறது. இந்த வகையில் இந்திய அணி நல்ல சுழற் பந்துவீச்சு கூட்டணியை வைத்திருக்கிறது. பகுதி நேர பந்துவீச்சாளரான முசீர் கான் கூட அரை இறுதியில் 10 ஓவர்கள் பந்துவீசி இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார். எனவே ஆஸ்திரேலியா அணியை விட இந்தப் பகுதியில் இந்திய அணி பலமாக இருக்கிறது.

மேலும் இந்த மைதானத்தில் முதலில் பந்து வீசிய அணி 17 முறையும், முதலில் பேட்டிங் செய்த அணி எட்டு முறையும் வென்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டாஸ் வெல்வதும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.

மேலும் போட்டி நடக்கும் மைதானத்தைச் சுற்றிலும் ஆன வானிலை 40% மழை வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. போட்டியின் இடையிடையே தூறல்கள் வந்து போட்டி தடைப்பட வாய்ப்புகள் உண்டு. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காற்றில் ஈரப்பதம் 69 சதவீதம் இருக்கும்.

இதையும் படிங்க : 12 வருடங்களில் 3 போட்டிகள்.. 13 வருடத்தில் முதல் முறை.. இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு

இந்த போட்டி இந்தியாவில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் போட்டி நாளை மதியம் 1:30 மணிக்கு துவங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.