U19 உலககோப்பை.. 2 சதங்கள்.. புது வரலாறு படைத்த இந்திய அணி.. அரை இறுதிக்கு தகுதி

0
2517
ICT

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையில் இந்திய அணி இன்று நேபாள் அணியை சந்தித்தது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆதர்ஸ் சிங் 21 மற்றும் அர்சின் குல்கர்னி 18 என விரைவில் வெளியேறினார்கள்.

- Advertisement -

இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் முஷீர் கானை இந்த முறை மூன்றாவது இடத்திற்கு அனுப்பவில்லை. அவரது இடத்தில் அனுப்பப்பட்ட மோலியா 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து கேப்டன் உதய் சகரன் உடன் சச்சின் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேபாள் அணி பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்க்கொண்டு விளையாடியது.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 215 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. உதய் சகரன் 107 பந்தில் 100 ரன்கள், சச்சின் தாஸ் 101 பந்தில் 116 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் சேர்த்தது. நேபாள் அணித்தரப்பில் குல்சன் ஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மெதுவான ஆடுகளத்தின் பெரிய இலக்கை நோக்கி விளையாடிய அனுபவம் இல்லாத நேபாள் இளம் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு 50 ஓவர்கள் விளையாடுவதைத்தான் குறிக்கோளாக வைத்திருந்தார்கள்.வெற்றி நோக்கி விளையாடுவது அவர்கள் குறிக்கோளாக இல்லை.

அந்த அணிக்கு நான்காவது வீரராக வந்த தேவ் கானல் 33, பதினோராவது வீரராக வந்த துர்கேஷ் குப்தா ஆட்டம் இழக்காமல் 29 ரன்கள் எடுக்க, நேபாள் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் பந்துவீச்சில் கலக்கி வரும் இடது கை சுழற் பந்துவீச்சாளர் சௌமை பாண்டே இந்த போட்டியிலும் நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
தற்பொழுது பாயிண்ட்ஸ் டேபிளில் நான்கு போட்டியில் நான்கையும் வென்று, +3.240 ரன் ரேட் உடன், சூப்பர் சிக்ஸ் சுற்றில் குரூப் ஒன்றில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது.

இதையும் படிங்க : “நானும் ஜெய்ஸ்வாலும் ஒரு பிளான் பண்ணோம்.. அவர் வேற மாதிரி பிளேயர்” – ரஜத் பட்டிதார் பாராட்டு

மேலும் இந்த வெற்றியின் மூலம் அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணி ஐந்தாவது முறையாக தொடர்ந்து அரை இறுதிக்கும் தகுதி பெற்று அசத்தி இருக்கிறது. இதன் மூலம் புது வரலாறு படைத்திருக்கிறது இந்திய அண்டர் 19 அணி.