வெறும் 76 ரன்.. U19 ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி.. பங்களாதேஷ் பரிதாப தோல்வி

0
508
India

மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் ஆசியக் கோப்பை தொடரை பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

இன்று 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மலேசியா கோலாலம்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

திரிஷா அசத்தல் பேட்டிங்

இதைத் தொடர்ந்து இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இந்த போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி.கமலினி 9 பந்தில் 5 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்தார். மிடில் வரிசையில் அதிகபட்சமாக கேப்டன் நிகி பிரசாத் 21 பந்தில் 12 ரன், மிதிலா வினோத் 12 பந்தில் 17 ரன், ஆயுசி சுக்லா 13 பந்தில் 10 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்திய அணிக்கு நெருக்கடிக்கு இருந்த நேரத்தில் துவக்க வீராங்கனை ஆக வந்த திரிஷா மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 47 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் பெண்கள் அணியின் தரப்பில ஃபர்ஜானா யாஸ்மின் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பரிதாபமாக சுருண்ட பங்களாதேஷ் பெண்கள் அணி

இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் பெண்கள் அணிக்கு 9 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் ரன்கள் எடுத்து பரிதாபமாக வெளியேறினார்கள். அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீராங்கனை சோயா 24 பந்தில் 18 ரன், ஜுயாரியா ஃபர்தோஸ் 30 பந்தில் 22 ரன் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : நான் மூன்றாவது டெஸ்டில் ஃபாலோ ஆனை தவிர்க்க நினைக்கல.. ஹெட்டுக்கு இந்த பிளான் ரெடி – ஆகாஷ் தீப் பேட்டி

இறுதியாக பங்களாதேஷ் பெண்கள் அணி 76 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் ஆயுசி சுக்லா மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பையை வென்றது. வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரை திலக் வர்மா தலைமையில் இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெண்கள் அணி வென்று வந்திருக்கிறது!

- Advertisement -