95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்.. 7 ரன்களில் இந்திய அளவிலான சாதனை மிஸ் ஆனது

0
92

Under-19 ஆசியக் கோப்பை 2025 தொடக்க ஆட்டத்தில், இந்தியாவின் 14 வயது  வீரர் வைபவ் சூர்யவன்ஷி UAE பந்துவீச்சை துவம்சம் செய்து 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து அசத்தினார். துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வெறும் 56 பந்துகளில் சதமடித்தார். அதில் 5 பவுண்டரிகளும் 9  சிக்ஸர்களும் அடங்கும்.

இறுதியில் 95 பந்துகளில் 171 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்சில் 9 பவுண்டரி, 14 சிக்ஸர். இந்தப் போட்டியில் வெறும் 7 ரன்கள் தூரத்தில் வரலாற்று சாதனையை தவறவிட்டார்.அம்பதி ராயுடுவின் யூத் ஒருநாள் போட்டிகளில் இந்தியர்களுக்கான அதிகபட்ச ஸ்கோர் 177 ரன்கள் என்ற நீண்டகால சாதனையை முறியடிக்க 7 ரன்கள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில் வைபவ் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ரன் குவிப்பு:

தற்போது இந்திய U-19 வீரர்களில் 2-வது அதிகபட்ச ஸ்கோர் வைபவ் சூர்யவன்ஷியிடம் உள்ளது. இதே போன்று, விஹான் மல்ஹோத்ரா மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஆகியோரும் தலா 68 ரன்கள் எடுத்து அசத்த, இறுதில் வேதாண்ட் 38 ரன்களும்,அபிக்யான் 32 ரன்களும்,கன்ஷிக் 28 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா U-19 அணி 433 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
UAE தரப்பில் உத்திஷ் சூரி மற்றும் யுக் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய யுஏஇ அணி பேட்டிகள் தடுமாறி வருகிறது இமாலய இலக்கை துரத்திய அந்த அணி வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

தடுமாறிய யுஏஇ அணி:

38.4 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருக்கிறார் அந்த அணியின் பிரித்வி மாது அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில்  தேவேந்திரன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்

- Advertisement -