கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

U19 ஆசிய கோப்பையை வென்றது பாகிஸ்தான்.. பைனலில் இந்தியா படுதோல்வி.. வைபவ் ஏமாற்றம்

அண்டர் 19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இதனை அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஹம்சா மற்றும் சமீர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹம்சா 18 ரன்களில் ஆட்டம் இழக்க, மறுபுறம் சமீர் இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். சமீரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர்.

பாகிஸ்தான் ரன் குவிப்பு:

113 பந்துகளை எதிர்கொண்ட அவர் 172 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். நடுவரிசையில் அஹமத் உசேன் அரை சதம் கடக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

கேப்டன் ஆயுஷ்  மாத்ரே இரண்டு ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. எனினும் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி அதிரடி காட்டி மூன்று சிக்ஸர்களை அடித்தார். எனினும் 10 பந்துகளை எதிர்கொண்ட அவர் 26 ரன்கள் சேர்த்திருந்த போது ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி வெற்றி:

அரோன் ஜார்ஜ் 16 ரன்களும் விகான் மல்ஹத்ரா 7 ரன்களிலும்  ஆட்டம் இருந்தனர்.  இந்த தொடரில் இரட்டை சதம் விளாசிய அபிகியான் குண்டு 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அண்டர் 19 அணி 26.2 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க: ஆசஸ் டெஸ்ட்.. தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்.. தண்டனைக்கும் தயார்- இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து

பாகிஸ்தான் பந்துவீச்சில் அலி ராசா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டர் 19 ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி வென்று இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் கூட பொறுமை காக்காமல் பேட்டை சுற்றி ரன்கள் சேர்க்க முயற்சித்து தோல்விக்கு காரணம் என குறிப்பிடுகிறது.

- Advertisement -
Published by