இந்திய கிரிக்கெட்

புவனேஷ்க்கு தன்னம்பிக்கை போக முக்கிய காரணம் இதுதான்.. நாம விரும்பின கம்பேக் இதில்லை – விகாரி கருத்து

​நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் செயல்பாடு குறித்தும், அணியின் வெற்றி குறித்தும் இந்திய அணியின் முன்னணி வீரர் ஹனுமா விஹாரி தனது யூடியூப் சேனல் மூலமாக சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

​நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்து அசத்தியுள்ளது. இந்தத் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மூத்த பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது முதல் ஓவரில் சிறப்பாகப் பந்துவீசி அசத்தினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக அவர் வீசிய ஒரு நோ-பால் அந்தப் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.

​இந்த சூழலில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு குறித்து ஹனுமா விஹாரி பேசுகையில், “அனைவரும் அவரது கம்பேக் காகக் காத்திருந்தனர். முதல் ஓவர் மிக அற்புதமாக இருந்தது. அவர் அவுட் ஸ்வீங்கர் மூலம் சீபர்ட்டை திணறடித்தார். சரியான இடங்களில் பந்துவீசினார். ஆனால் இரண்டாவது ஓவரில் அவர் வீசிய அந்த நோ-பால் அவருக்கான அனைத்தையும் மாற்றிவிட்டது. அந்த ஓவர் மிகவும் விலை உயர்ந்ததாக மாறியது, அதிலிருந்து அவர் தனது சில தன்னம்பிக்கையை இழந்திருக்கலாம்”

“நாம் எதிர்பார்த்த கம்பேக் இதுவல்ல. ஆனால் பரவாயில்லை, அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடுகிறார். அவருக்குக் சில போட்டிகள் அவகாசம் கொடுங்கள். அவர் அந்த ரிதத்திற்குள் சென்றால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். அவர் அனுபவம் வாய்ந்தவர், அதைத் திருத்திக் கொள்வார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரும் ஒரு மனிதர்தான்” என்று கூறி இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியை இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்றாகப் பாராட்டியுள்ளார். வெளிநாடுகளில் இது போன்ற பெரிய பவுண்டரிகளைக் கொண்ட மைதானங்களில் 220 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்திப் பிடிப்பது சாதாரண விஷயம் அல்ல என்றும், கடினமான சூழ்நிலைகளில் நிதிஷ் குமார் ரெட்டி மிகச் சிறப்பாகப் பந்துவீசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்திய இந்த அபாரமான பேட்டிங் திறமை அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -
Published by