புதிய 2 ஐ.பி.எல் அணிகளின் வருகையால் இரு குரூப்பாக போட்டிகள் பிரிகிறதா ? பிசிசிஐயின் புதிய விதிமுறைகள்

0
143
Two New IPL Teams 2022

உலகின் வெற்றிகரமான பிரிமியர் லீக் தொடர் எதுவென்றால் கிரிக்கெட்டை பொறுத்த வரை அது ஐபிஎல் தான். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இவ்வளவு பெரிய வெற்றியை அடையும் என்று அதை தொடங்கும் போது பலரும் நினைக்கவில்லை. தற்போது உலகின் மிகவும் பிரபலமான தொடராக வலம் வரும் ஐபிஎல் இதுவரை 8 அணிகளை கொண்டு ஆடப்பட்டு வந்தது. ஆனால் ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கருத்தில் கொண்டும் இன்னமும் பல புதிய திறமைமிக்க வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நினைவில் கொண்டும் இந்த முறை மற்றும் 2 புதிய அணிகளை களமிறக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவது இது புதியது இல்லை. கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த தொடரில் 10 அணிகள் விளையாடின. தற்போது இருக்கும் அணிகளை தவிர்த்து கொச்சி மற்றும் புனே அணிகள் விளையாடின. 10 அணிகளும் 14 போட்டிகளை லீக் சுற்றில் விளையாடியது. கடந்த 2011ஆம் ஆண்டு 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் தனது குழுவில் இருக்கும் நான்கு அணிகளுடன் இரண்டு முறையும் எதிர் குழுவில் இருக்கும் நான்கு அணிகளுடன் ஒரு முறையும் மற்றுமொரு அணியுடன் 2 முறையும் மோதி 14 ஆட்டங்கள் விளையாடியது.

- Advertisement -

ஆனால் பல்வேறு சிக்கல்களால் இந்த 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்த முடியாமல் போனது. 2012ஆம் ஆண்டு முதல் மறுபடியும் 8 அணிகள் கொண்ட தொடரே அரங்கேறியது. ஆனால் இந்த முறை 2 புதிய அணிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது. இதனால் பிசிசிஐ அமைப்பிற்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ரைசிங் புனே அணியை வாங்கிய கோயங்கா இந்த முறையும் ஒரு அணியை ஒப்பந்தம் செய்துள்ளார். மற்றொரு அணியை சிவிசி என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

அதிகாரப்பூர்வமாக இந்த முறை 10 அணிகள் பங்கேற்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் மீண்டும் 2011ஆம் ஆண்டு நடந்தது போலவே அணிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆட்டங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு எதுவும் விதிமுறைகளில் ஐபிஎல் அமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருமா என்று ரசிகர்கள் எங்க தொடரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.