ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணியில் நெட் பவுலர்களாக பங்கேற்றுள்ள 2 முன்னாள் ஆர்சிபி வீரர்கள்

0
4625

ஐபிஎல்லில் வெற்றிகரமாக திகழக்கூடிய அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் நல்ல வீரர்களை தேர்வு செய்து அவர்களைத் தரமான வீரர்களாக மாற்றுவதில் சென்னை அணியின் பங்கு மிகப் பெரியது. அப்படி சென்னை அணியில் இருந்து உருவாக்கி விடப்பட்ட வீரர்கள் இந்திய அணில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அணியில் எப்படி தரமான கிரிக்கெட் வீரர்கள் இருப்பார்களோ அதே போல தரமான நெட் பவுலர்களை தேர்வு செய்வதிலும் சென்னை அணி சிறந்தது. உதாரணமாக சமீபத்தில் காயமடைந்த இலங்கை அணி வீரர் மத்திசா பத்திரனாவுக்கு பதிலாக 17 வயது கல்லூரி மாணவர் ஒருவரை வயது நெட்பவுலராக பணி அமர்த்தி உள்ளது. பலர் ஐபிஎல் விளையாடிவிட்டு தற்போது வாய்ப்பு கிடைக்காமல் சென்னை அணியில் நெட் பவுலர்களாக விளையாடிகொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் ஆர்சிபி அணியில் விளையாடி இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது, அவர்களைப் பற்றி காண்போம்.

- Advertisement -

குல்வந்த் கெஜ்ரோலியா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்வந்த் கெஜ்ரோலியா தற்போது 2024ம் ஆண்டு சென்னை அணியின் நெட்பவுலராக இருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன இவர் சமீபத்தில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இவரது அற்புதமான பந்துவீச்சினால் இவர் மீது சிஎஸ்கேவின் பார்வை திரும்பியது. இதற்கு முன்னர் குல்வந்த் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் விளையாடி இருக்கிறார். இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கும் தனது திறமையை நிரூபிக்க அப்போது வாய்ப்புகள் கிடைத்தன.

- Advertisement -

இருப்பினும் கிடைத்த வாய்ப்பை நிரூபிக்க போராடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எந்த ஐபிஎல் அணியாலும் அவரை தக்க வைக்க முடியவில்லை. தற்போது சிஎஸ்கே அணியில் இருப்பதால் நல்ல எதிர்காலம் இவருக்கு அமையும் என்று நம்பலாம்.

முருகன் அஸ்வின்: முதலில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் வர்ணனையாளராக நியமிக்கப்பட்டார். இவரை சிஎஸ்கே நிர்வாகம் அணுகிய காரணத்தினால் தற்போது சிஎஸ்கே அணியின் வலைப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணியில் கவனிக்க வேண்டிய 5 அன்கேப்டு இந்திய இளம் வீரர்கள்

அனுபவ வீரர் மற்றும் லெக் ஸ்பின்னரான முருகன் அஸ்வின் சென்னை அணியில் பிரசாந்த் சோலங்கி போன்றோருக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களும் வலை பயிற்சியில் இவரது பந்துவீச்சை எதிர் கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும். தற்போது சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் இல்லாததால் இவரை மாற்று வீரராக எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே அஸ்வினுக்கு இந்த சீசன் ஒரு திருப்புமுனையாக அமையலாம்.

- Advertisement -