லக்னோ அணிக்கு எதிரான அடுத்தப் போட்டியில் சென்னை அணி செய்தே ஆகவேண்டிய 2 மாற்றங்கள்

0
1101
Moeen Ali Jadeja and MS Dhoni

ஐ.பி.எல் ஆரம்பித்து மூன்றே ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தாலும், எக்கச்சக்க புதிய எதிர்பார்ப்புகளைத் தூண்டியும், நிறைய புதிய பார்வைகளையும் உண்டாக்கி இருக்கிறது. ஐ.பி.எல்-ன் முதல் ஆட்டத்தில் சென்னை கொல்கத்தாவிடம் தோற்றது, பெரிய விமர்சனத்திற்குரிய ஒன்றாக இல்லையென்றாலும், தோல்வி அடைந்த விதம் சராசரி இரசிகர்களுக்கும் சரியானதாய் இல்லை!

சென்னை தோல்வி அடைந்த விதம் சென்னை அணியின் அணித்தேர்வை விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. முக்கிய வீரரான தீபக் சஹாரும், மொயின் அலியும் இல்லாது போனாலும், சென்னை எல்லாவற்றுக்குமே சிறப்பான மாற்று வீரர்களை வைத்திருக்கிறது. அப்படி இருக்கும் போது 131 ரன்களை அதுவும் 1700 நாட்களுக்குப் பிறகு தோனி அரைசதமடித்துதான் கொண்டு வரவேண்டியதாய் இருப்பது ஏன் என்ற விமர்சனம் எழுகிறது.

- Advertisement -

முதல் ஆட்டத்திற்கான சென்னை அணியில், லெப்ட்-ஹேன்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் பவுலர் கேப்டன் ஜடேஜா இருக்க, பின்பு அவரைப் போலவேயான சான்ட்னர் எதற்கு? சான்ட்னருக்குப் பதிலாக இலங்கையின் மிஷ்ட்ரி ஆப்-ஸ்பின்னர் தீக்சனாவை எடுத்திருந்தால் அவர் பவர்-ப்ளேவிலும் வீசுவார் இல்லையா? அடுத்து துஷார் தேஷ்பாண்டேவை விட வேகமும், ஸ்விங்கும் கொண்ட ஹங்கர்கேகரை ஏன் அணியில் எடுக்கவில்லை? அவர் பேட்டிங்கில் ஹிட்டிங்கும் ஆடுவாரே? என்று பல கேள்விகளும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் முன் வைக்கப்படுகின்றன!

இந்த நிலையில் அடுத்து லக்னோ அணியுடன் மோதும் போட்டியில் என்னென்ன மாற்றங்களைச் சென்னை செய்வது நல்லதாய் அமையலாம் என்றால், விசா பிரச்சினையால் முதல் போட்டியில் ஆடாத மொயீன் அலி இரண்டாவது போட்டியில் சான்ட்னர் இடத்தில் கட்டாயம் இடம் பெறுவார். சிவம் துபே இடத்தில் ஹங்கர்கேகரைக் கொண்டு வருவது மிக முக்கியம். ஆடுகளம் சுழலுக்குச் சாதகமாய் இருக்குமென்றால் லெக்-ஸ்பின்னர் பிரசாந்த் சோலங்கியையும் முயற்சிக்கலாம்.

ருதுராஜ் – கான்வோ – உத்தப்பா
மொயீன் – அம்பதி – ஜடேஜா
தோனி – பிராவோ – ஹங்கர்கேகர்
மில்னே – துஷார்

- Advertisement -

இந்த அணியே பேட்டிங், பவுலிங் என இருபக்கமும் பலமானதாய் இருக்கும். இந்த அணியில் நம்பர் 9 வரை பேட்டிங்கும், 6 பவுலிங் ஆப்சனும் உண்டு. பேட்டிங் லைன்-அப் இதைவிட பெரியதாய் வேண்டுமென்று போகையில், பவுலிங் பலவீனப்பட்டு அணி அடிக்கற ரன்கள் வீணாகி, தோற்கும் அபாயம் நிறைய இருக்கிறது. இதை உணர்ந்து அணியின் பவுலிங் யூனிட்டை பலமாக்கிக்கொள்வதே சரி!