இந்தியா யாரும் எதிர்பார்க்காத மாற்றம்.. தெ.ஆ போட்டிய மறந்துடுங்க.. நிச்சயம் ஜெயிப்போம் – சூரியகுமார் பேச்சு

0
4
Surya

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.

மேலும் இந்த போட்டியில் தோல்வியடையும் அணி அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்திய அணியில் இரண்டு மாற்றம்

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடத்தில் அக்சர் படேல் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். அதே சமயத்தில் ரிங்கு சிங் இடத்தில் சஞ்சு சாம்சன் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மாவுடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவாரா? என்பது சந்தேகமாக உள்ளது. பகுதிநேர ஆப் ஸ்பின்னரை எதிர்கொள்வதற்கு துவக்க இடத்தில் ஒரு வலதுகை பேட்ஸ்மேன் கட்டாய தேவையாக இருக்கிறார். எனவே மேலே சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக வரவேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

கடந்த போட்டியை மறந்து விடுங்கள்

மேலும் இந்த போட்டியில் இந்திய அணி பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணியை தாண்டினால் சில கூடுதல் சாதகங்கள் இருக்கும். குறிப்பாக இந்தியா வெஸ்ட் இண்டீஸ் போட்டி நடைபெறாமல் போனால், இரு அணிகளும் மூன்று புள்ளிகள் இருக்கும்போது ரன் ரேட் முக்கியமானதாக இருக்கும்.

இதையும் படிங்க : 176 ரன்.. வெஸ்ட் இண்டிசை ஊதி தள்ளிய தெ.ஆ.. இந்தியாவுக்கு அடித்த செம லக்.. செமி பைனல் வாய்ப்பு பிரகாசம்

டாஸ் நிகழ்வில் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய வீரர்கள் ரிலாக்ஸ் ஆக இருக்கிறார்கள். அணியில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. அணி கூட்டத்தில் ஹர்திக் பாண்டியா பேசியது மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் கற்றுக் கொள்கிறோம். கடந்த போட்டியில் நடந்ததை மறந்து விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -