இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நிலை இருந்தது.
சரிந்து மீண்ட வெஸ்ட் இண்டீஸ்
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பம் முதல் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 83 உடன் எடுத்து முக்கிய 7 விக்கெட்டுகளை இழந்து பெரிய நெருக்கடியில் சிக்கியது. நூறு ரன் தாண்டுமா? என்ற சந்தேகம் இருந்தது.
இந்த நிலையில் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக 31 பந்தில் 49 ரன்கள், ரொமாரியோ செப்பர்டு 37 பந்தில் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடியின் அதிரடி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் லுங்கி நெகிடி 3, ரபாடா மற்றும் கார்பின் போஸ் இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
சவுத் ஆப்பிரிக்கா அதிரடி வெற்றி
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய சவுத் ஆப்பிரிக்க அணிக்கு முதல் விக்கட்டுக்கு எட்டு ஓவரில் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. குயிண்டன் டி காக் 24 பந்தில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேப்டன் மார்கரம் 46 பந்துகளில் 82 ரன்கள், ரியான் ரிக்கல்ட்டன் 28 பந்தில் 45 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : கம்பீர் உலகக் கோப்பையை ஜெயிக்க மாட்டார்.. பொறுப்புலையும் இருக்க மாட்டார் – ஹார்மிசன் அதிரடி கருத்து
இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணிக்கு ரன் ரேட் பிரச்சனை தீர்ந்திருக்கிறது. இனி இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.






