ஐபிஎல் 2024

சிஎஸ்கே எடுக்கலனா.. எனக்கு இந்த அணியில் விளையாடனும்னு ஆசை.. அதுக்கு இதுதான் காரணம் – துஷார் தேஷ்பாண்டே பேட்டி

ஐபிஎல் 2025 மெகா ஆக்சன் ஏலம் நாளை முதல் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள உள்ள பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் சிஎஸ்கே அணியின் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இதுவரை ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது. இதில் கடந்த சீசனில் தோனி தனது கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில், தற்போது ருதுராஜ் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சென்னை அணி கேப்டன் ருத்ராஜ், தோனி, சிவம் துபே, பத்திரானா, ஜடேஜா ஆகிய ஐந்து வீரர்களை தக்க வைத்தது.

அதில் சென்னை அணியின் நட்சத்திர நம்பிக்கை நாயகனாக விளங்கிவரும் துஷார் தேஷ்பாண்டேவை விடுவித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சென்னை அணி திரும்பவும் இவரை வாங்கும் முயற்சியில் ஈடுபடும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் சென்னை அணி ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட ஆசைப்படுவதாக துஷார் தேஷ்பாண்டே சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே இல்லை என்றால் இந்த அணியில் விளையாட ஆசை

இதுகுறித்து அவர் கூறும் போது “சிஎஸ்கே இல்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஏலம் பெற விரும்புகிறேன். ஏனென்றால் அது எனது சொந்த அணி. உங்களது சொந்த அணிக்காக சொந்த மக்கள் முன்னிலையில் விளையாடுவது ஒரு வித்தியாசமான உணர்வு. நான் வான்கடே மைதானத்தில் இரண்டு முறை விளையாடியுள்ளேன். உங்கள் சொந்த மாநில மக்கள் முன்னாள் விளையாடுவது வித்தியாசமான உணர்வு.

இதையும் படிங்க:ஹர்ஷித் ராணா செஞ்ச அந்த டெக்னிக்கை யூஸ் பண்ணிருந்தா.. உலகக் கோப்பை நமக்கு கிடைச்சிருக்கும் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

நான் மஞ்சள் ஜெர்சியில் விளையாடினாலும் மக்கள் என்னை உற்சாகப்படுத்தினர். எனவே சென்னை அணியில் விளையாட விட்டாலும் நான் மும்பை அணியில் விளையாட ஆசைப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார். இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தேஷ்பாண்டே 42 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2023 ஆம் ஆண்டில் 21 விக்கெட்டுகளும், கடந்த வருடத்தில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். எனவே தற்போது நடைபெற உள்ள மெகா ஆக்ஷனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை திரும்ப ஏலத்தில் எடுக்குமா என்று எதிர்பார்க்கலாம்

- Advertisement -
Published by

Recent Posts