ஹர்ஷித் ராணா செஞ்ச அந்த டெக்னிக்கை யூஸ் பண்ணிருந்தா.. உலகக் கோப்பை நமக்கு கிடைச்சிருக்கும் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
1409

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்து முடித்த பிறகு ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஹர்சித்ரானா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸி முதல் டெஸ்ட்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய ஆஸ்திரேலியா அணியில் முதல் நான்கு விக்கெட்டுகளை பும்ரா மற்றும் சிராஜ் சாய்த்தனர்.

இந்திய அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடக்கூடிய ட்ராவிஸ் ஹெட் இந்த முறை தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இது இந்திய அணி போட்டியில் முன்னிலை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி தற்போது ஏழு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் குவித்து தடுமாறி வருகிறது. ஹர்சித்ராணா குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலகக்கோப்பை நமக்கு கிடைத்திருக்கும் – ஆகாஷ் சோப்ரா

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சில் ட்ராவிஸ் ஆட்டமிழந்து வெளியேறிய ஒரு விக்கெட் சிறப்பான விக்கெட் என்று நினைத்தேன். அவர் அரௌண்ட் த ஸ்டம்ப் லைனில் ஓடி வந்து பந்தை பிட்ச் செய்யும்போது பந்து சற்று வெளியே சென்றது. இதை அறியாமல் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். 19 நவம்பர் 2023 அன்று இதே போன்ற நிகழ்வு நடந்திருந்தால் உலகக்கோப்பை நமக்கே கிடைத்திருக்கும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க:எங்க பவுலர் கிட்ட விராட் கோலி வித்தை பலிக்கல.. காரணம் அவர் இந்த தப்பு செஞ்சார் – மேத்யூ ஹைடன் விளக்கம்

ஹர்ஷித் ரானா ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வேண்டும் என்றால் நியூசிலாந்து அணிக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடி இருக்க வேண்டும். ஏனென்றால் பும்ராதான் அப்போது இல்லை. இதனால் அவரை அந்த போட்டியில் விளையாட வைத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு கொடுத்து விளையாட வைத்திருக்க வேண்டும். ஆனால் இதை எதுவுமே செய்யாமல் நேரடியாக டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்து உள்ளீர்கள். திறமையை கையாள இது சிறந்த வழிமுறை அல்ல” என்று கூறி இருக்கிறார். ட்ராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -