இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி டெஸ்ட் வடிவத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் பரோடா மற்றும் திரிபுரா அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் திரிபுரா அணிக்காக விளையாடி வரும் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரரான ஜெய்ஸ்வாலின் மூத்த சகோதரர் தேஜஸ்வி ஜெயஸ்வால் தனது அறிமுக சீசனில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்
இந்தியாவில் தற்போது ரஞ்சி டிராபி டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் எலைட் குரூப் ஏ பிரிவில் திரிபுரா மற்றும் பரோடா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி தனது முதல் இன்னிங்ஸில் 82.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக செத் 78 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய திரிபுரா அணி 120 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 482 ரன்கள் குவித்து டிக்ளர் செய்துள்ளது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களான பிக்ரம் குமார் தாஸ் மற்றும் ஜேசிங் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, அதற்குப் பிறகு மூன்றாவதாக களம் இறங்கிய இந்திய சர்வதேச தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மூத்த சகோதரர் 27வயதான தேஜஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார். தனது அறிமுக சீசனின் மூன்றாவது ஆட்டத்தில் விளையாடி வரும் இவர் 159 பந்துகளை எதிர் கொண்டு 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 82 ரன்கள் குவித்தார்.
ஜெய்ஸ்வாலின் சகோதரர் சிறப்பான ஆட்டம்
யஷஸ்வி ஜெஸ்வாலை போலவே இவரும் ஒரு இடது கை ஆட்டக்காரர் ஆவார். இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகளில் ஓரளவு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த போட்டி அவரது திறமையை நன்றாக வெளிப்படுத்தியது. இதன் மூலமாக திரிபுரா அணி நல்ல முன்னிலை பெற்றுள்ளது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேஜஸ்வி ஜெய்ஸ்வால் எதிர்பாராத விதமாக 82 ரன்களில் சிவாலிக் சர்மாவின் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதையும் படிங்க:10 சிக்ஸ்.. 7 ஃபோர்ஸ்.. டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்.. தோனி சாதனையும் முறியடித்த சஞ்சு சாம்சன்
அதற்குப் பிறகு தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் பரோடா அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர் சிவாலிக் சர்மா 25 ரன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோட்சில் சிங் 12 ரன்களும் குவித்து களத்தில் இருக்கிறார்கள். மொத்தம் மூன்று நாட்கள் ஆட்டம் முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்த போட்டியில் திரிபுரா அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.






