கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

7 பேர் ஒற்றை இலக்கம்.. ஆனா ஸ்கோர் 177.. அருண் கார்த்திக் அட்டகாசம்.. கடைசியில் நெல்லையை வென்றது திருச்சி.. டிஎன்பிஎல் 2024

தற்போது நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரில் இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நெல்லை கேப்டன் அருண் கார்த்திக் பேட்டிங்கில் தனியாக போராட, திருச்சி அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் வரிசையில் இருந்து பெரிய பங்களிப்பு எதுவுமே வரவில்லை. கேப்டன் அருண் கார்த்திக் தவிர எல்லா பேட்ஸ்மேன்களுமே சொதப்பினார்கள்.

நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் தனி வீரராக 51 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர் உடன் 84 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் ரித்திக் ஈஸ்வரன் 23 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். மொத்தம் அணியில் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெல்லை அணி 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. திருச்சி அணியின் பந்து வீச்சு தரப்பில் சரவணகுமார் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களுக்கு 30 ரன்கள் விட்டு தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு அடுத்து அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் ஆண்டனி தாஸ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் வாசிம் அகமத் 17 பந்தில் 27 ரன்கள், கே.ராஜ்குமார் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த அர்ஜுன் மூர்த்தி 2 பந்தில் 1 ரன், சியாம் சுந்தர் 26 பந்தில் 39 ரன்கள், ஜாபர் ஜமால் 27 பந்தில் 39 ரன்கள், சஞ்சய் யாதவ் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : அடிச்சு சொல்றேன்.. ரோகித் விராட்டுக்கு நடந்ததுதான் கில்லுக்கும் நடக்கும்.. கேப்டன் பொறுப்புக்கு சரி வருவாரா? – விக்ரம் ரத்தோர் பேட்டி

கடைசிக்கட்டத்தில் ஆர். ராஜ்குமார்3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 31 ரன்கள் எடுக்க திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வென்றது. நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பேட்டிங் போராட்டம் வீணானது!

- Advertisement -
Published by
Tags: TNPL2024