டிஎன்பிஎல்.. மிகப்பெரிய சர்ச்சை நோ பால்.. நடராஜன் அணிக்கு எதிராக வீசிய ஈஸ்வரன்.. நடந்தது என்ன.?

0
1429

டிஎன்பிஎல் தொடரின் 26வது போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதிய போட்டியில் திருச்சி வீரர் ஈஸ்வரன் வீசிய மிகப்பெரிய நோபால் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

திண்டுக்கல் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் மான் ஜஃப்னா 35 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய கணேஷ் 37 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

திருச்சி அணியின் பந்துவீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் நான்கு ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் களம் இறங்கிய திருச்சி அணி திருப்பூர் அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது.

திருப்பூர் அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் மூன்று விக்கெட்டுகளும், அஜித் ராம் மூன்று விக்கட்டுகளும் கைப்பற்றினார்கள். இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திருப்பூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் திருப்பூர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திருச்சி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஈஸ்வரன் வீசியநோ-பால் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

திருப்பூர் அணி பேட்டி செய்து கொண்டிருந்தபோது 51 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்த நிலையில் களத்தில் இருந்த மான் ஜப்னாவுக்கு ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்தை ஈஸ்வரன் க்ரீசிலிருந்து மிகப் பெரிய நோ-பால் ஒன்றை வீசினார். அதாவது அவரது கால் கோட்டில் இருந்து ஒரு மீட்டர் இடைவெளியில் மிகப்பெரிய நோபால் ஒன்றை வீசி இருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது ஒரு பந்துவீச்சாளர் பொதுவாக எல்லைக் கோட்டில் இருந்து சிறிய அங்குல இடைவெளியில் நோ-பால் வீசுவது வழக்கம். ஆனால் ஈஸ்வரனின் பந்து வீச்சு விஷயத்தில் இது தற்போது பெரியதாக இருக்கிறது. அதாவது கோட்டிற்கும், அவரது கால் இடைவெளிக்கும் சுமார் ஒரு மீட்டர் நீளம் இருப்பதால் அந்தப் பந்தை அவர் வேண்டுமென்றே வீசிஇருக்கலாம் என்று ஒரு தரப்பினரால் கூறப்படுகிறது. ஆனால் ஒரு தரப்பினர் அவர் இதை வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். ஆனால் கிரிக்கெட்டில் இது போல தவறுகள் நடைபெறுவது சகஜம் என்பதால் இது தற்செயலாக நடந்ததாகவே தெரிகிறது.

இதையும் படிங்க:என்ன ஒரு கேப்டன்சி.. 17வது ஓவர் பண்ண அந்த ஒன்னே போதும்.. சூர்யகுமாருக்கு இர்பான் பதான் பாராட்டு

இந்தப் போட்டியில் ஈஸ்வரன் மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ள திருப்பூர் அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது திருப்பூர் அணி மட்டுமல்லாமல் கோவை, சென்னை, திண்டுக்கல் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -