என்ன ஒரு கேப்டன்சி.. 17வது ஓவர் பண்ண அந்த ஒன்னே போதும்.. சூர்யகுமாருக்கு இர்பான் பதான் பாராட்டு

0
1461

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்தியாவின் சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சார் பட்டேலை பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதற்கு அடுத்ததாக பேட்டிங் களம் இறங்கிய இலங்கை மிகச்சிறப்பான தொடக்கம் கிடைத்த போதிலும், அதற்கு பின்னால் வந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதில் குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர் அக்சார் பட்டேல் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். குசால் மெண்டிஸ் 45 ரன்கள் அர்சுதீப் சிங் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நிஷான்கா 79 ரன்களில் அக்சார் பட்டேலின் பந்துவீச்சில் வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு கடைசி 30 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்தது. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் கேப்டன் சூரியகுமார் ஆட்டத்தின் 17வது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் ரியான் பராக்கை கொண்டுவந்து கமிந்து மெண்டிசை ஆட்டமிழகச் செய்தார். இதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் இர்பான் பதான் சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சாரை பாராட்டி பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது “அக்சார் பட்டேலின் அற்புதமான இரண்டு ஓவர்கள் இந்தியாவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தித் தந்தது. அதில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சூரியகுமார் யாதவின் நட்சத்திர கேப்டன்சியால் ஆட்டத்தின் 17வது ஓவரில் ஆப் ஸ்பின்னர் ரியான் பராக்கை உள்ளே கொண்டு வந்து இடது கை பேட்ஸ்மேன் ஆன கமிந்து மெண்டிசை ஆட்டமிழக்கச் செய்தார்.

இதையும் படிங்க:இப்ப திறமையான கிரிக்கெட்டர் இவங்க 3 பேருதான்.. அதுல 2 இந்திய வீரர்கள் – ஆப்கான் நூர் அகமத் தேர்வு

ஆட்டத்தின் நாடித்துடிப்பை பிடித்து சிறப்பாக செயல்பட்டது அருமையாக இருந்தது” என்று போட்டி முடிந்த பிறகு இர்பான் பதான் சமூக வலைதளத்தில் தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார். இன்று இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி தற்போது நடைபெற உள்ளது.

- Advertisement -