பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா முத்தரப்பு ODI.. எந்த சேனலில் பார்ப்பது? நேரம் என்ன?முழு விபரம்

0
429

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறும் இந்த தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்த சூழலில் முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி கராச்சியில் கட்டப்பட்டுள்ள புதிய மைதானத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் இந்த போட்டி நடைபெறுவதால் பெரும் சாதகமாக கருதப்படுகிறது.

- Advertisement -

அதே சமயம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய உத்வேகத்துடன் பாகிஸ்தான் உள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பலத்துடன் இந்த தொடரை சந்திக்கிறது.

எந்த சேனலில் பார்க்கலாம்?

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இந்த போட்டிகள் நடைபெறுவதால் இது நல்ல பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதும் இந்த போட்டியை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம்.

- Advertisement -

இதேபோன்று ஓடிடியில் ஜியோ டிவி ஆப்பில் இலவசமாக கண்டு களிக்கலாம் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி சனிக்கிழமை மதியம் இந்திய நேரப்படி 2.30 மணிக்கு தொடங்குகிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் 116  போட்டிகளில் விளையாடுகிறது.

பாகிஸ்தான் , நியூசிலாந்து நேருக்கு நேர்:

இதில் பாகிஸ்தான அணி 61 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 51 போட்டிகளிலும் ஒரு போட்டி சமனிலும், மூன்று போட்டி முடிவுகள் இல்லாமலும் ரத்தாகி இருக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் இரு அணிகளும் இதுவரை 28 முறை ஒருநாள் போட்டிகளில் மோதி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி 22 முறையும், நியூசிலாந்து அணி வெறும் ஆறுமுறையும் தான் வெற்றி பெற்றிருக்கிறது.

இதேபோன்று லாகூர் பாகிஸ்தானுக்கு மிகவும் ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு இதுவரை ஐந்து முறை நியூசிலாந்தை எதிர்கொண்டு ஐந்து முறையும் பாகிஸ்தானே வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது

பாகிஸ்தான் பிளேயிங் 11 கணிப்பு:  ஃபகார் ஜமான், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), கம்ரான் குலாம், சவுத் ஷகீல், சல்மான் ஆகா, தயப் தாஹிர், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது

நியூசிலாந்து பிளேயிங் 11 கணிப்பு: வில் யங்/டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன்

- Advertisement -