பும்ராவுக்கு எதிரா என்னோட திட்டம் இதுதான்.. இந்த மந்திரத்தை தான் பாலோ பண்ணினேன் – டிராவிஸ் ஹெட் பேட்டி

0
789

இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்டில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட் பும்ரா பந்துவீச்சுக்கு எதிராக தான் எந்த மாதிரியான அணுகு முறையில் விளையாடினேன்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று மழையின் காரணமாக 13.2 ஓவர் மட்டுமே பந்து வீசப்பட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் எந்தவித இடையூறும் இல்லாமல் முழுவதுமாக போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்திருக்கிறது.

- Advertisement -

ஹெட் – பும்ரா மோதல்

இன்று டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுது பந்துவீச்சில் நிதீஷ்குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருந்தார்கள். இந்த நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா உடனுக்குடன் பும்ராவை கொண்டுவர முடியவில்லை. பும்ரா அப்பொழுதுதான் தனது நீண்ட ஸ்பெல்லை முடித்திருந்தார். இதன் காரணமாக அவரை ரோகித் சர்மா கொண்டு வரவில்லை.

இதற்கு அடுத்து மீண்டும் பும்ரா பந்துவீச்சுக்கு வந்த பொழுது ஹெட் அவரைப் பெரிய அளவில் எந்தவித சிரமமும் இல்லாமல் விளையாடினார். மேலும் சில பவுண்டரிகளையும் அடித்தார். இன்று கேட் 160 பந்துகளை எதிர் கொண்டு 18 பவுண்டரிகள் உடன் 152 ரன்கள் எடுத்து கடைசியில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பும்ரா பந்துவீச்சில் ஹெட் அணுகுமுறை

இன்றைய போட்டியில் இந்திய அணியின் எந்த பந்துவீச்சாளரும் ஹெட்டுக்கு எந்த தொந்தரவையும் கொடுக்க முடியவில்லை. வழக்கமாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போலவே இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்த்து மிக சிறப்பாக அதிரடியாக விளையாடினார். இறுதியில் பும்ரா மட்டுமே அவரைத் தடுத்து நிறுத்த முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிராஜை சும்மா குறை சொல்லாதீங்க.. அந்த பையனால இதெல்லாம் செய்ய முடியும் – ஆலன் பார்டர் ஆதரவு

இதுகுறித்து பேசியுள்ள ஹெட் கூறும் பொழுது “பும்ரா ஆரம்பத்தில் ஸ்டெம்புகளின் அடிப்பகுதிகளுக்கு செல்கிறார். இது அவருக்கு எதிர்வினை ஆற்றுவது பற்றியது. மேலும் அவரிடம் நல்ல பவுன்சர் இருக்கிறது. அத்துடன் அவருக்கு நல்ல விக்கெட் டேக்கிங் பந்துகளும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை அவருக்கு எதிராக நாம் பாசிட்டிவாக இருப்பதை பற்றியது. மாறாக அவருக்கு எதிராக நான் ரன் அடிப்பது பற்றியது கிடையாது. நான் அவருடைய பந்துவீச்சில் பார்வேர்ட் டிபென்சில் உறுதியாக இருக்க விரும்பி, அதை செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -