ஆஸ்திரேலியா லெஜெண்ட் ஆலன் பார்டர் முகமது சிராஜை விராட் கோலி போன்றவர் என பாராட்டி இருக்கிறார்.
தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியில் முதல் பெயராக இருக்கும் ஆலன் பார்டர் முகமது சிராஜை பாராட்டி இருப்பது திடீரென தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. ஏனென்றால் முகமது சிராஜை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவின் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முகமது சிராஜ் மீதான விமர்சனம்
இரண்டாவது டெஸ்டின் போது ஹெட் மற்றும் முகமது சிராஜ் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. இது புரிதல் இன்மையின் காரணமாக உருவானதாகவும் பிறகு இருவரும் சமாதானம் அடைந்து விட்டதாகவும் இருவருமே வெளியில் வந்து தெரிவித்திருந்தார்கள்.
இருந்த போதிலும் கூட மைக்கேல் கிளார்க், மார்க் டெய்லர் இன்னும் சில ஆஸ்திரேலியா வீரர்கள் முகமது சிராஜிக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என தொடர்ந்து பேசி வந்தார்கள். அவர் எல்பிடபிள்யு அப்பில் செய்யாமலே விக்கெட் கிடைத்தது போல கொண்டாடுவது கிரிக்கெட் விதிகளுக்கு எதிரானது என மைக்கேல் கிளார்க் அவரை தண்டித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முகமது சிராஜ் ஹெட் உடன் மோதியதற்கு மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
ஆலன் பார்டர் தந்த ஆதரவு
முகமது சிராஜிக்கு இப்படி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என முன்னாள் வீரர்களிடம் கடுமையான எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், ஆலன் பார்டர் போன்ற ஒரு லெஜெண்ட் வீரர் அவரைப் பாராட்டி இருப்பது தற்போது பெரிய கவனத்தைப் பெற்று இருக்கிறது. இது இந்தியாவின் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்களுக்கு பதிலடியாக அமைந்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : 92 ஆண்டுகள்.. பும்ரா படைத்த அரிய சாதனை.. கேப்டன்சியில் தவறிய ரோகித் சர்மா.. இந்திய அணிக்கு வாய்ப்பு உண்டா?
“முகமது சிராஜ் விராட் கோலியை போன்றவர். இவரால் கூட்டத்தை அதிகரிக்க முடியும். மேலும் கேப்டனின் டிலைட் ஆக இருக்கிறார். அத்தோடு ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் நீங்கள் விரும்புகிறீர்கள். சிராஜ் எதையும் விட்டுக் கொடுப்பவராக இருப்பதில்லை. இவரைப் பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






