இதுக்கு கூட விமர்சனமா.. ஒரு கிரிக்கெட்டரா நாங்க எவ்ளவோ தியாகம் செய்கிறோம் – ரோகித்துக்கு ஆதரவாக டிராவிஸ் ஹெட்

0
328

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி விளையாட உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் ரோகித் சர்மாவின் செயல்பாடு குறித்த தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியை தவறவிடும் ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து விமர்சன ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இது தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடையே சற்று விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி நானாக இருந்திருந்தால் முதல் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாடி இருப்பேன் என்று கருத்துக் கூறி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் விராட் கோலிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பல விஷயங்களை தியாகம் செய்கிறோம் – டிராவிஸ் ஹெட்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “100 சதவீதம் நான் ரோகித் சர்மாவின் முடிவை ஆதரிக்கிறேன். இதே சூழ்நிலையில் நானும் இருந்திருந்தால் ரோகித் சர்மா செய்ததை தான் செய்திருப்பேன். ஒரு கிரிக்கெட் வீரராக நாங்கள் பல விஷயங்களை தியாகம் செய்கிறோம். நாங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த வாழ்க்கையை வாழ்வதோடு மிகவும் கவனிக்கப்படுகிறோம். ஆனால் மறுபுறத்தில் முக்கியமான மைல்கற்களை நாங்கள் தவற விடுகிறோம்.

இதையும் படிங்க:இந்தியாவிடம் பேசி விட்டோம்.. சாம்பியன்ஸ் டிராபி இப்படித்தான் நடக்கும் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் பேட்டி

எனவே இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் இதையே தான் செய்திருப்பேன். இது போன்ற தருணம் திரும்பவும் கிடைக்காது எனவே ரோகித் சர்மா திரும்பவும் மீண்டும் வருவார் என்று நம்புகிறேன்” என்று ஹெட் கூறி இருக்கிறார். ரோகித் சர்மா இல்லாத நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. எனவே இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -