பிசிசிஐ என்ன வேணா செய்யட்டும்.. ஆனா பாகிஸ்தான் அவங்களுக்கு இத செய்யுங்க – அக்தர் கோரிக்கை

0
134
Akthar

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு ஏற்றுக் கொண்டதில் பெரிய தவறு ஒன்றும் கிடையாது என சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.

2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் போட்டிகளை வெளியில் நடத்திக் கொள்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதித்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகிறது. இது குறித்து பேசி உள்ள சோயப் அக்தர் எதிர்காலம் குறித்து சிறப்பான முறையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கண்டிஷன்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த சம்மதிப்பதாகவும், அதே சமயத்தில் கிடைக்கும் வருவாயில் குறிப்பிடத் தகுந்த அளவு தங்களுக்கு உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனவும், அதன் மூலமாக இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாடாததால் ஏற்படும் இழப்பை சரி கட்ட முடியும் எனவும் கூறி இருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்தியாவில் நடக்கும் ஐசிசி தொடர்களின் போது தாங்களும் இந்தியாவிற்கு வரமாட்டோம் என்றும், அப்பொழுது ஹைபிரிட் மாடலில் போட்டிகளை பாகிஸ்தான் அணிக்கு நடத்த வேண்டும் என்றும் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எதிர்காலத்தில் நாம் இப்படி நடக்க வேண்டும்

இதுகுறித்து சோயப் அக்தர் கூறும் பொழுது ” நீங்கள் ஹோஸ்டிங் ரைட்ஸ் மற்றும் ரெவின்யூ போன்றவற்றிற்காக பணம் பெறுவதில் எந்த தவறும் கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு நன்றாகவே இருக்கிறது. இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். பாகிஸ்தான் நிலைப்பாடு நியாயமானது. எங்கள் நாட்டில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு அவர்கள் வர விரும்பவில்லை. எனக்கு கிடைக்கும் வருமானத்தில் அதிக அளவு வருமானம் எங்களுக்கு வரும்படி அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க : ஜிம்பாப்வே 2 சீரிஸ்.. ஆப்கான் அணி அறிவிப்பு.. 2 கேப்டன்கள்.. வெளி டூரில் சாதிக்குமா?

“எதிர்காலத்தில் இந்தியாவில் நடக்கும் ஐசிசி தொடர்களுக்கு நாம் நட்பு கரம் நீட்டி சென்று விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவிற்கு சென்று விளையாடி இந்திய அணியை தோற்கடிக்க வேண்டும். அங்கு அவர்களது சொந்த இடத்தில் அவர்களது மைதானத்தில் வெல்வது தான் சிறப்பு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -