இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் மட்டும்தான் எனக்கு முக்கியம்.. வேறு எங்கும் ஆடமாட்டேன்.. இதுவே காரணம் – டிராவிஸ் ஹெட் பேட்டி

தற்போது கிரிக்கெட் உலகில் நடைபெற்று வரும் பிரான்சிசைஸ் டி20 லீக்குகளில் ஐபிஎல் தொடருக்கு மட்டுமே தான் முன்னுரிமை தருவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 6.80 கோடி ரூபாய்க்கு டிராவிஸ் ஹெட் வாங்கப்பட்டார். இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலத்திற்கு முன்பாக அந்த அணியால் 14 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரை தற்காலத்தில் சுவாரசியப்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்களில் இவருக்கு முக்கிய இடம் இருக்கிறது.

டிராவிஸ் ஹெட் அணிகள்

கடந்த வருடத்தில் டிராவிஸ் ஹெட் அமெரிக்க டி20 லீக்கில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது எந்த வெளிநாட்டு டி20 லீக்குகளிலும் தன்னால் விளையாடுவது கடினம் என்பது குறித்து வெளிப்படையாக டிராவிஸ் ஹெட் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

குறிப்பாக டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்கின்ற காரணத்தினால் அவர் எங்கு விளையாடினாலும் அந்தத் தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் அவருக்கு பெரிய அளவில் சம்பளம் குறைந்த நாட்களுக்கு கிடைக்கிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரராக இருப்பதால் அவருக்கு ஓய்வு குறைவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் மட்டுமே விளையாடுவேன்

இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது ” நான் ஐபிஎல் தவிர மற்ற எங்கும் கிரிக்கெட் விளையாட மாட்டேன். ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் தவிர நான் விளையாடும் மூன்றாவது தொடராக பிக்பேஸ் மட்டுமே இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் வேறு எங்கும் நான் விளையாட போவதில்லை. எனக்கு இது தேவையான நேரத்தை ஒதுக்க வாய்ப்பளிக்கிறது என்று நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில் எனக்கு இருக்கும் குறைவான நேரத்தில் அமெரிக்க டி20 லீக் மற்றும் இங்கிலாந்து 100 டி20 லீக் ஆகியவற்றில் விளையாடுவதற்கு நேரம் இருக்காது”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க போகும் இந்திய அணி.. யாருடன் மோத போகிறது தெரியுமா?

“உண்மையில் நான் மிகவும் களைப்படைந்து இருந்தேன். இதன் காரணமாகத்தான் நான் ஓய்வு கேட்டு வாங்கினேன். இப்பொழுது நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் பிக்பேஸ் டி20 லீக் விளையாட விருப்பத்துடன் இருக்கிறேன். ஆனால் எங்கள் சர்வதேச அட்டவணையுடன் வைத்து பார்க்கும் பொழுது அதில் விளையாட சிரமமாக இருக்கிறது. மேலும் எனக்கு ஒரு இளம் குடும்பம் இருக்கிறது அதற்கு நேரம் ஒதுக்க வேண்டியது முக்கியமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts