ஓபனா சொல்றேன் இந்திய அணியின் எக்ஸ் பேக்டர் இவர்தான்.. என்னை மிரள வச்சாரு – டிராவிஸ் ஹெட் பேட்டி

0
386
Head

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் எக்ஸ்-பேக்டர் வீரராக யார் இருப்பார்கள் என ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கூறியிருக்கிறார்.

இந்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதற்காக இரு அணிகளும் தற்போது தீவிர தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

இந்திய அணியில் பலவீனமான பகுதிகள்

தற்போது இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 20 பேட்டிங் ஃபார்ம் கவலை அளிப்பதாக இருக்கிறது. இதில் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. மேலும் கைவிரலில் காயம் அடைந்திருக்கும் கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.

மேலும் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் தற்போது முகமது சிராஜ் ஃபார்மில் இல்லை. மேலும் முகமது ஷமி காயம் குணமடைந்திருந்த பொழுதும் கூட, இந்திய அணியில் உடனடியாக சேர்க்கப்படும் நிலையில் இல்லை. எனவே பேட்டிங் மற்றும் பௌலிங் யூனிட்டுக்களில் இந்திய அணிக்கு இந்த பிரச்சனைகள் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் ஹெட் ஒரு இந்திய வீரர் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் எக்ஸ்-பேக்டர்

இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது ” நீங்கள் பும்ராவுக்கு ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் அவர்தான் உங்களுக்கு ஒரு படி மேலே எப்பொழுதும் இருக்கிறார். அவர் எல்லா கிரிக்கெட் வடிவத்திலும் மிகச் சிறந்தவர். நீங்கள் பெரிய போட்டிகளுக்கு பெரிய வீரர்களை விரும்புகிறீர்கள். அப்படி ஆன பெரிய வீரர்களில் பெரிய வீரர் பும்ரா!”

“நான் அவரை முதல் முதலில் எதிர் கொண்ட பொழுது அவருடைய பந்து ஆகா எங்கிருந்து வந்தது என்பதைப் போல இருந்தது. ஏனென்றால் பந்தை அவர் வீசும் முறையில் நாம் நினைப்பதை விட பந்து மிக விரைவாக நம்மை வந்து சேர்ந்து விடுகிறது”

இதையும் படிங்க : பாகிஸ்தான் தொடர்கள்.. ஜிம்பாப்வே அணி அறிவிப்பு.. தைரிய முடிவு.. 2 கேப்டன்.. 3 புதிய வீரர்கள்

“மிச்சல் ஜான்சனை போல அவரும் ஒரு வித்தியாசமான ஆக்சனை வைத்திருக்கிறார். பந்து வெளியே இருக்கும் அதை நீங்கள் முழுமையாக பார்க்க முடியாது. ஆனால் அதே பந்து உங்களை விரைவாகவும் வந்து சேர்ந்து விடுகிறது. இந்த காரணங்களால் அவர்தான் இந்திய அணியின் எக்ஸ்-பேக்டராக இந்த தொடரில் இருக்கப் போகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -